மனைவியை கொலை செய்ததாக சிறையிலடைக்கப்பட்ட கணவர்: மனைவி உயிருடன் வந்ததால் அதிர்ச்சி
கர்நாடகா மாநிலத்திலுள்ள மைசூரு நகரில், தன் மனைவியை கொலை செய்ததாக ஒருவர் இரண்டு ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட அந்தப் பெண், நேற்று மைசூரு நீதிமன்றத்திற்கு வந்ததால் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
மனைவியை கொலை செய்ததாக சிறையிலடைக்கப்பட்ட கணவர்
2020ஆம் ஆண்டு, கர்நாடகாவிலுள்ள Kushalnagar என்னுமிடத்தில் மல்லிகே என்னும் பெண் காணாமல் போனார்.
Bettadapura என்னுமிடத்தில் பெண்ணொருவரின் எலும்புக்கூடு ஒன்று கிடைத்ததைத் தொடர்ந்து, பொலிசார் மல்லிகேவின் கணவரான சுரேஷ்தான் தன் மனைவியைக் கொலை செய்ததாகக் கூறி அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.
மனைவி உயிருடன் இருப்பது தெரியவந்ததால் அதிர்ச்சி
ஆனால், இம்மாதம் 1ஆம் திகதி, மல்லிகே வேறொரு ஆணுடன் நடமாடும் வீடியோ ஒன்றை சுரேஷின் சட்டத்தரணியான பாண்டு பூஜாரி கண்டுள்ளார்.
அவர் அந்த வீடியோவை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க, நீதிமன்றம் மல்லிகேவுக்கு சம்மன் அனுப்பியது.
நேற்று பொலிசார் மல்லிகேவை நீதிமன்றத்தில் ஆஜர் செய்தார்கள்.
ஆக, மல்லிகேவை கொலை செய்ததாக அவரது கணவர் சுரேஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மல்லிகே உயிருடன் இருப்பது தெரியவந்ததால் வழக்கில் பெரும் குழப்பம் உருவாகியுள்ளது.
அத்துடன், பொலிசார் கண்டுபிடித்த எலும்புக்கூடு யாருடையது என்னும் கேள்வியும் எழுந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |