குழந்தையை விற்ற கணவன்... மனைவிக்கு நேர்ந்த துயர முடிவு
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில், தன் பிள்ளையை பணத்துக்காக விற்ற ஒருவர், அது தொடர்பில் மனைவி சண்டை போட்டதால் மனைவியையும் கொலை செய்துள்ளார்.
குழந்தையை விற்ற கணவன்...
கர்நாடகாவின் ஹஸன் மாவட்டத்தில் வாழ்ந்துவரும் சைஃபுல்லா (37) என்னும் நபருக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி சண்டை நடந்துவந்துள்ளது.

இந்நிலையில், அவரது மனைவி கொலை செய்யப்பட்டுள்ளார். சைஃபுல்லாவும் அவரது குடும்பத்தினரும் தலைமறைவாகிவிட்டார்கள்.
கொலை செய்யப்பட்ட 31 வயது பெண்ணின் தந்தையான பாபு, தன் மகளை சைஃபுல்லா வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திவந்ததாகவும், பணம், நகைகள், வீடு என அனைத்தும் கொடுத்தும் சைஃபுல்லாவும் அவரது குடும்பத்தினரும் தன் மகளைக் கொடுமைப்படுத்துவதை நிறுத்தவில்லை என்றும் கூறியுள்ளார்.
இதற்கிடையில், சைஃபுல்லா தனக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்ததும், அதை பணத்துக்காக விற்றுவிட்டதாகவும், சண்டைக்கு அதுதான் முக்கியக் காரணம் என்றும் கூறப்படுகிறது.
அத்துடன், தனக்குப் பிறந்த இன்னொரு குழந்தையையும் சைஃபுல்லா விற்க முயன்றதாகவும், அதற்கு அவரது மனைவி மறுப்பு தெரிவித்ததாகவும், அதைத் தொடர்ந்தே பிரச்சினைகள் மேலும் அதிகரித்ததாகவும் அந்தப் பெண்ணின் சகோதரி தெரிவித்துள்ளார்.
சைஃபுல்லாவும் அவரது குடும்பத்தினரும் தலைமறைவாகிவிட்ட நிலையில், பொலிசார் அவர்களை தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |