வகுப்பு தோழியை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய நபர்: தொடர்ந்த அசம்பாவிதங்கள்
கணவனைப் பிரிந்த தனது வகுப்புத் தோழியிடம், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வறுபுறுத்தியுள்ளார் ஒருவர். அந்தப் பெண் மறுக்கவே, அவரை கொலை செய்துவிட்டார் அவர்.
தொடர்ந்த அசம்பாவிதங்கள்
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்திலுள்ள உத்தர கன்னடா என்னுமிடத்தைச் சேர்ந்த ரஞ்சிதா (Ranjitha Bhanasode, 29), கணவனைப் பிரிந்து வாழ்ந்துவந்துள்ளார்.

ரஞ்சிதாவின் வகுப்புத் தோழரான ஒருவர், அடிக்கடி அவரது வீட்டுக்கு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு அவர் ரஞ்சிதாவை வற்புறுத்த, மீண்டும் திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் தனக்கு இல்லை என்று கூறியிருக்கிறார் ரஞ்சிதா.
திருமணம் செய்துகொள்ளுமாறு அவர் தன்னைத் தொடர்ந்து வற்புறுத்தியதால், அவருடனான தொடர்பையே துண்டித்துள்ளார் ரஞ்சிதா.
இந்நிலையில், சனிக்கிழமையன்று பணி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த ரஞ்சிதாவைப் பின் தொடர்ந்த அந்த 30 வயது வகுப்புத் தோழர், ரஞ்சிதாவின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு தப்பியோடியுள்ளார்.
உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார் ரஞ்சிதா.
தலைமறைவான கொலையாளியை பொலிசார் தேடிவந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையன்று, மரங்களடர்ந்த ஒரு பகுதியில், மரம் ஒன்றில் அவரது உயிரற்ற உடல் தொங்கிக்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவர் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்டிருக்கலாம் என கருதப்படும் நிலையில், இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |