சாலையில இந்த காயை பார்த்தா உடனே வாங்கி சாப்பிடுங்க.. ஏராளமான மருத்துவ குணங்கள்!
சின்ன கோலி வடிவில் பச்சை நிறத்தில் இருக்கும் கலாக்காயில் எண்ணற்ற மருத்துவ குணம் உள்ளது.
இந்த காயில் வைட்டமின் சி, பி, இரும்புச்சத்து, ஆன்டிஆக்சிடன்ட்களான உட்பட பல ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது.
சரி கலாய்க்காயை சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத பலன்களைப் பற்றி பார்ப்போம் -
1. ஈறுகளில் இரத்தம் வடிதல், உட்புற உறுப்புகளில் இரத்தம் வடிதல் போன்ற பிரச்சினைக்கு கலாக்காயை அருமருந்தாக செயல்படுகிறது.
2. கலாக்காய் பொடியை தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் அஜீரணக் கோளாறு சரியாகும். மேலும் வயிற்றில் எந்த பிரச்சினையை ஏற்பட்டாலும் முற்றிலும் இந்த கலாக்காய் பொடி சரிசெய்து விடும்.
3. 10 மில்லி கிராம் அளவு கலாக்காய் பழத்தை சாப்பிட்டு வந்தால், காய்ச்சல் குணமாகும்.
4. கலாக்காயை சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள பெக்டின் எனும் ஸ்டார்ச் சீரான செரிமானத்திற்கு உதவி செய்யும்.
5. மேலும், கலாக்காய்யை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பித்தம், குமட்டல் குணமாகும்.
6. கலாக்காயை ஜூஸாக குடித்து வந்தால், இதய தசைகளின் வலிமை பெறும். இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
7. கலாக்காய் தினமும் சாப்பிட்டு வந்தால் கண் சம்பந்தப்பட்ட கரும்படலம், ரத்தப்படலம், சதைபடலம் உட்பட பல நோய்களை குணமாக்கும்.
8. கலாக்காய் பொடியை தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து அந்த நீரை பருகி வந்தால் கருப்பையில் உள்ள அழுக்குகள் நீங்கும்.
9. கலாக்காய் பொடியை எண்ணெய்யில் கலந்து தலைக்கு தேய்த்து வந்தால் கூந்தல் ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் மின்னும். முடி உதிர்வையும் கட்டுப்படுத்தும்.