நெஞ்சு சளியை கரைக்கும் அற்புத மூலிகை! மிக எளிதாக வீட்டிலேயே வளர்க்கலாம்
மூலிகைகளிலேயே அதிக நறுமணமும், அற்புத மருத்துவ குணங்களும் கொண்டது கற்பூரவள்ளி.
இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் அதிகம் காணப்படும், வாசனை மிக்கதான இதன் இலைகள் தடிப்பாகவும், மெதுமெதுப்பாகவும், விளிம்பு, கூர்மையற்ற பற்கள் போல் காட்சி தரும்.
கசப்புச் சுவையும் காரத்தன்மையும் வாசனையும் கொண்ட இதன் இலை மருத்துவ குணம் கொண்டதாகும்.
100 கிராம் கற்பூரவள்ளியில்,
4.3 கிராம் கொழுப்பு, 25 மிகி சோடியம், 1,260 மிகி பொட்டாசியம், வைட்டமின் ஏ (34%), கால்சியம்(159%), வைட்டமின் சி (3%), இரும்புச்சத்து (204%), வைட்டமின் பி6 (50%) மற்றும் மக்னீசியம் (67%) 69 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 9 கிராம் புரோட்டீன் உள்ளது.
மருத்துவ பயன்கள்
- சளி மற்றும் இருமலைப் போக்க உதவுகிறது.
- பெரியவர்களில் நாசி நெரிசல் மற்றும் தொண்டை புண் குறைக்க பயன்படுகிறது.
- ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சிக்கு சிகிச்சையளிக்க கற்பூரவள்ளி கலவை பயன்படுத்தப்படுகிறது.
- வயிற்றின் செரிமானத்திற்கு உதவுகிறது.
- உணவுகளின் சுவையில் பயன்படுத்தப்படுகிறது.
- வெப்பமண்டல நாடுகளில் ஏடிஸ் கொசுக்களை விரட்ட கற்பூரவள்ளி நடப்படுகிறது.
எப்படி பயன்படுத்த வேண்டும்?
* குழந்தைகளுக்கு கற்பூரவல்லி இலைச்சாற்றில் சிறிது பனங்கற்கண்டு சேர்த்துக் கொடுத்தால், இருமல், சளி நீங்கும்.
* கற்பூரவல்லி இலைச்சாற்றை கொதிக்கும் நீரில் சேர்த்து ஆவி பிடித்து வந்தால் தொண்டை கரகரப்பு, மூக்கடைப்பு சரியாகும்.
* இதன் இலையை எண்ணெயில் பொரித்து அந்த எண்ணெயை தொண்டையில் தடவி வந்தால் தொண்டை வலி, காய்ச்சல் குணமாகும்.
* ஆஸ்துமா நோய் உள்ள பெரியவர்கள் கற்பூரவல்லி இலைச்சாற்றை தேனுடன் கலந்து சாப்பிடலாம். இலையை மென்றும் சாப்பிடலாம்.
* கற்பூரவல்லி இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரை குடித்து வந்தால் மூட்டுவலி படிப்படியாக குறையும். சிறுநீர் தொடர்பான பிரச்சினைகளும் இதனால் அகலும்.
* கற்பூரவல்லி இலைச்சாறை குழந்தைகளுக்கு மாலை அல்லது அதிகாலை வேளையில் ஒரு டீஸ்பூன் அளவு கொடுத்து வந்தால் வயிற்று பூச்சி தொல்லை இருக்காது.