2 ஆண்டுகள் சிறப்பாக விளையாடியும் வாய்ப்பில்லை: நான் தகுதியானவன்..கருண் நாயர் ஆதங்கம்
ரஞ்சி கிண்ணத் தொடரில் விளையாடி வரும் கருண் நாயர், அதிகமான வாய்ப்புகளுக்கு நான் தகுதியானவன் என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கருண் நாயர்
இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் (Karun Nair) ரஞ்சி கிண்ணத் தொடரில் கர்நாடக அணிக்காக விளையாடி வருகிறார்.
கோவா அணிக்கு எதிரான டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் கருண் நாயர் 174 ஓட்டங்கள் குவித்ததன் மூலம் பாராட்டுகளை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் இந்திய அணியில் ஒரு தொடரில் மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டது என வேதனை தெரிவித்துள்ளார்.
அடுத்த இலக்கு
அவர் கூறுகையில், "கடந்த இரண்டு ஆண்டுகளாக உள்நாட்டு கிரிக்கெட்டில் தனது சிறந்த செயல்பாட்டிற்குப் பிறகு ஒரு சில ஆட்டங்களில் மட்டுமே விளையாடியது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. நான் இன்னும் சிறப்பாக இருக்கத் தகுதியானவன் என்று நினைக்கிறேன். ஒரு தொடரை விட அதிகம். இந்திய அணியில் சில நபர்கள் தங்கள் உணர்வுகள் குறித்து என்னுடன் நல்ல உரையாடல்களைக் கொண்டிருந்தனர். அவ்வளவுதான்" என்றார்.
மேலும், அடுத்த இலக்கு என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்,
"நேர்மையாக சொன்னால், அடுத்து எனக்கு என்ன இலக்கு இருக்க முடியும்? நான் செய்ய விரும்புவது நாட்டிற்காக விளையாடுவதுதான். அதை செய்ய முடியாவிட்டால், அடுத்த விடயம் நான் விளையாடும் அணிக்காக ஆட்டங்களில் வெற்றி பெற முயற்சிப்பதுதான்" என தெரிவித்தார். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |