சட்டமன்ற தேர்தலில் நடிகர் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை ஆதரவு யாருக்கு? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் நடிகர் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படையின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சட்டமன்றத்தேர்தலில் திருவாடானை தொகுதியில் அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட வெற்றிப்பெற்ற முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், நடிகருமான கருணாஸ் சமீபத்தில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்நிலையில், 2021 சட்டமன்ற தேர்தலில் முக்குலத்தோல் புலிப்படை திமுக-வுக்கு ஆதரவு அளிப்பதாக அச்சங்கத்தின் தலைவர் கருணாஸ் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடைபெற உள்ள 2021 சட்டமன்ற தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை தங்கள் தலைமையில் உள்ள திராவிட் முன்னேற்ற கழகத்திற்க்கு முழு ஆதரவினை தெரிவித்து கொண்டும்
2021 சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலின் தலைமையில் மதசார்பற்ற கூட்டணியில் முக்குலத்தோர் புலிப்படைக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தொகுதிகள் கொடுக்க வேண்டியும் இது சம்மந்தமாக நேரில் சந்திக்க அனுமதி அளிக்குமாறு கேட்டு கொள்வதாக கருணாஸ் அறிக்கை அளித்துள்ளார்.
