உங்களுக்கு இந்த அறிகுறி எல்லாம் இருக்கா? அப்போ கண்டிப்பா உங்களுக்கு கருப்பை பிரச்சினை தான்
பெண் பிள்ளைகளின் வளர்ச்சியை ஏழு பருவங்களாக பிரிக்கலாம் என்பது நாம் அறிந்த விடயம் ஒன்றாகும்.
கர்ப்பப்பையின் வளர்ச்சியையும் கூட இதில் சேர்த்துக்கொல்லலாம். பூப்படைவதில் தொடங்கி மாதவிடாய் சுழற்சி, கர்ப்பக்காலம், பிரசவக்காலம், அதன் பிறகு மாதவிடாய் சுழற்சி, இறுதியாக மாதவிடாய் சுழற்சி நிறுத்தம் என்று பல விடயங்கள் உண்டு. இவை அனைத்துமே கர்ப்பப்பையுடன் தொடர்புடையது.
இந்த அனைத்து பிரச்சினைகளையும் நீங்கள் இலகுவாக எடுத்துக்கொண்டால், அது தவறான ஒரு செயல் தான்.
ஆகவே இந்த பதிவின் மூலம் முதலில் கர்ப்பபை பிரச்சினையால் ஏற்படும் அறிகுறிகள் மற்றும் அது பற்றிய மேலதிக தகவல்களை தெரிந்துக்கொள்வோம்.
கருப்பை பிரச்சனையின் அறிகுறிகள்
-
கருப்பை பகுதியில் வலி
-
கடுமையான யோனி இரத்தப்போக்கு
-
ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி
-
அசாதாரண யோனி வெளியேற்றம்
-
இடுப்பு, கீழ் வயிறு அல்லது மலக்குடல் பகுதியில் வலி
-
மாதவிடாய் பிடிப்பு அதிகரிப்பு
-
அதிகம் சிறுநீர் கழித்தல்
-
உடலுறவின் போது வலி
-
உடலுறவுக்குப் பிறகு இரத்தப்போக்கு
-
நீடித்த மாதவிடாய்
-
வயிறு வீக்கம்
-
மலச்சிக்கல்
-
சோர்வு
- காய்ச்சல்
கருப்பை பிரச்சனை வருவதற்கு காரணம் என்ன?
கருப்பை நார்த்திசுக்கட்டிகள்
ஹார்மோன்கள், குடும்ப வரலாறு மற்றும் கர்ப்பம் போன்ற சில காரணிகள் காரணமாக கருப்பை நார்த்திசுக்கட்டிகளில் ஆபத்து ஏற்படும்.
எண்டோமெட்ரியோசிஸ்
இது பொதுவாக பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள் எனவும், காசநோய் மற்றும் சாதாரண பிறப்புறுப்பு பாக்டீரியாக்களால் ஏற்படும் என்று கூறப்படுகின்றது.
கருப்பைச் சரிவு
ஈஸ்ட்ரோஜனின் குறைந்த அளவு, இடுப்பு தசைகள் சேதமடைதல், உடல் பருமன் அதிகரித்தல், நாள்பட்ட மலச்சிக்கல், நாள்பட்ட இருமல் ஆகியவை கருப்பைச் சரிவு அபாயத்தை அதிகரிக்கும்.
கருப்பை காசநோய்
இந்த கருப்பை காசநோயால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரிடம் பாலியல் தொடர்பில் இருந்தால் கருப்பை காசநோய் ஏற்படும்.
கருப்பை பிரச்சினைகளை எவ்வாறு கண்டறிவது?
கருப்பையில் ஏற்பட்டிருக்கும் சிக்கலை கண்டறிய, நீங்கள் நாடும் வைத்தியர் முதலில் குடும்ப வரலாற்றை பரிசோதிப்பார். ஏதேனும் பிரச்சினை உள்ளதா என்று பார்க்க யோனி பரிசோதனையும் செய்வார்.
இந்த பிரச்சினைக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகின்றன?
இதை கட்டுப்படுத்த மருந்துகள், உடற்பயிற்சிகள் மற்றும் கருப்பை நீக்கம், myomectomy என்ற அறுவை சிகிச்சை என சிகிச்சையளிக்கப்படும்.