தித்திக்கும் சுவையில் சத்தான கருப்பு கவுனி அரிசி அல்வா: ரெசிபி இதோ
கருப்பு கவுனி அரிசியில் உள்ள அதிக அளவு நார்ச்சத்தானது கெட்ட கொலஸ்ட்ரால் கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது. இதனால் உண்டாகும் இருதய பிரச்சனைகளின் அபாயத்தையும் குறைக்கிறது.
எனவே இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் ஒரு வேளை கருப்பு கவுனி அரிசியை உட்கொள்ளவது அவசியம் ஆகும்.
அந்தவகையில், கருப்பு கவுனி அரிசியை பயன்படுத்தி சத்தான மற்றும் சுவையான கருப்பு கவுனி அரிசி அல்வா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கருப்பு கவுனி அரிசி- 250g
- கருப்பட்டி வெல்லம்- 300g
- தேங்காய் பால்- 200ml
- ஏலக்காய் தூள்- 1 ஸ்பூன்
- நெய்- 150ml
- முந்திரி- 1 கைப்பிடி
செய்முறை
முதலில் கருப்பு கவனி அரிசியை 2- 3 முறை நன்கு கழுவி 12 மணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஊறிய அரிசியை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரிசி மூழ்கின்ற அளவிற்கு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு வாணலில் 100ml அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்கின்ற போது அதில் தூசி இல்லாத வெல்லம் சேர்த்து கரைந்து வரும்வரை கொதிக்க வைக்கவும்.
வெல்லம் நன்கு கொதித்து பாகு பதத்திற்கு வந்ததும் அதில் அரைத்து அரிசி கலவையை சேர்த்து கை விடாமல் கிளறவும்.
நன்கு கெட்டியாகி வந்ததும் இதில் தேங்காய்பால் சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
அவ்வப்போது நெய் சேர்த்து 40 நிமிடம் வரை கைவிடாமல் கிளறி நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான கருப்பு கவுனி அரிசி அல்வா தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |