தித்திக்கும் சுவையில் கருப்பு கவுனி அரிசி அல்வா.., எப்படி செய்வது?
கருப்பு கவுனி அரிசி ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு பாரம்பரிய அரிசி வகையாகும்.
இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலுக்கு அதிக ஆரோக்கியத்தைத் தருகின்றன.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் சத்தான கருப்பு கவுனி அரிசி அல்வா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கருப்பு கவுனி அரிசி- 250g
- கருப்பட்டி வெல்லம்- 300g
- தேங்காய் பால்- 200ml
- ஏலக்காய் தூள்- 1 ஸ்பூன்
- நெய்- 150ml
- முந்திரி- 1 கைப்பிடி
செய்முறை
முதலில் கருப்பு கவனி அரிசியை 2 முறை நன்கு கழுவி 12 மணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஊறிய அரிசியை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரிசி மூழ்கின்ற அளவிற்கு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு வாணலில் சிறிதளவு தண்ணீர், வெல்லம் சேர்த்து கரைந்து பாகு பதம் வடிகட்டிகொள்ளவும்.

இதற்கடுத்து அதே வாணலில் வெல்லப்பாகு, அரைத்து அரிசி கலவையை சேர்த்து கை விடாமல் நன்கு கிளறவும்.
பின்னர் நன்கு கெட்டியாகி வந்ததும் இதில் தேங்காய்பால் சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
இறுதியாக, நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து அவ்வப்போது நெய் சேர்த்து ஒட்டாமல் வரும்வரை கிளறி இறக்கினால் கருப்பு கவுனி அரிசி அல்வா தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |