உடலிற்கு ஆரோக்கியமான கருப்பு உளுந்து அல்வா.., இலகுவாக செய்வது எப்படி?
உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள், மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும்.
அந்தவகையில், உளுந்தை பயன்படுத்தி ஆரோக்கியமான கருப்பு உளுந்து அல்வா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கருப்பு உளுந்து- 1 கப்
- வெல்லம்- 1 கப்
- நல்லெண்ணெய்- ¾ கப்
- நெய்- ¾ கப்
செய்முறை
முதலில் கருப்பு உளுந்தை வாசனை வரும்வரை நன்கு பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
பின் இதனை நன்கு ஆறவைத்து மிக்ஸி ஜாரில் உளுந்து மற்றும் வெள்ளம் சேர்த்து பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து அரைத்து கலவையுடன் தண்ணீர் சேர்த்து தோசை மா போல் கலந்து எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் வாணலில் நெய் சேர்த்து சூடானதும் அரைத்த கலவையை சேர்த்து நன்கு கிளறவும்.
அவ்வப்போது நல்லெண்ணெய் சேர்த்து நன்கு ஒட்டாமல் வரும்வரை நன்கு கிளறவும்.
இறுதியாக எண்ணெய் மற்றும் நெய் பிரிந்து வரும்வரை நன்கு கிளறி இறக்கினால் சுவையான கருப்பு உளுந்து அல்வா தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |