கரூர் அசம்பாவிதம்: நீதிமன்றத்தை முறையிட தவெக தலைவர் விஜய் முடிவு
கரூர் அசம்பாவிதம் தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தினர் நீதிமன்றத்தை முறையிட முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீதிமன்றத்தை நாட விஜய் முடிவு
கரூரில் விஜயின் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பொதுமக்கள் 39 பேர் உயிரிழந்த நிலையில், தமிழக வெற்றிக் கழத்தின் தரப்பு இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திட நீதிமன்றத்தை நாடிட முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் கரூர் அசம்பாவிதம் குறித்து தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணி அவர்களின் இல்லத்தில் முறையீடு செய்யவும் தவெக நிர்வாகிகள் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்தவும் உத்தரவிட வேண்டும் என்று நீதிபதியிடம் முறையிட திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |