கரூரில் நடந்த அசம்பாவிதம்: விஜய் தீவிர ஆலோசனை
கரூரில் பேரிழப்புக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கட்சி நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
விஜய் ஆலோசனை
கரூரில் நேற்று நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள் மற்றும் எதிர்கட்சி தலைவர்கள் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கட்சி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
மேலும் இன்று கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் வழங்கவும் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |