தாய், சின்னஞ்சிறு பிள்ளைகள்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி
கரூர் தவெக பரப்புரையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூரின் வேலுச்சாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் நேற்று பரப்புரை மேற்கொண்டார்.
இதில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 குழந்தைகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர்.
இவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், இதில் மொத்தம் 39 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
12 ஆண்கள், 17 பெண்கள், சிறுவர்கள் 10 பேர் என மொத்தம் 39 பேர் பலியாகியுள்ளனர்.
இதில் கரூர் தான்தோன்றி மலை சிவசக்தி நகரைச் சேர்ந்த ஹேமலதா மற்றும் அவரது 2 மகள்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.