தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி லக்னோவில் குங்குமப்பூ வளர்த்த நபர் - எப்படி தெரியுமா?
காஷ்மீரில் அல்லாமல் லக்னோவில் குங்குமப்பூ உற்பத்தி தொடங்கும் போது மிகவும் அதிர்ச்சியளிக்கும் விடயமாக இருக்கிறது.
ஆம், லக்னோவில் வசிக்கும் ஹேமந்த் ஸ்ரீவஸ்தவா, உத்தரபிரதேச தலைநகரில் ஒரு தனித்துவமான முயற்சியில் குங்குமப்பூவை வளர்த்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். அவரது முயற்சி பாராட்டுக்குரியதாகும்.
ஏரோபோனிக்ஸ் நுட்பத்தைப் பயன்படுத்தி குங்குமப்பூ வளர்த்த நபர்
குங்குமப்பூவை காஷ்மீரின் குளிர்ந்த காலநிலை மற்றும் தனித்துவமான மண் நிலைகளில் மட்டுமே வளர்க்க முடியும்.
ஆனால் மண் தேவையில்லாத ஏரோபோனிக் தொழில் நுட்பத்தில் ஹேமந்த் இதை வளர்த்துள்ளார்.
பொதுவாக, குங்குமப்பூ வளர்ச்சிக்கு குளிர் வெப்பநிலை மற்றும் ஒரு சிறப்பு வகை மண் தேவைப்படுகிறது. இதன் காரணமாக காஷ்மீருக்கு வெளியே இதை பயிரிடுவது கடினம்.
இந்நிலையில் அமெரிக்காவில் பணிபுரிந்து வந்த நபர் ஒருவரே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதை உறுதிசெய்துள்ளார்.
அமெரிக்கா வேலையை விட்டு...
அமெரிக்காவின் முன்னணி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஸ்ரீவஸ்தவா, சமீபத்தில் இந்தியாவில் கோமதி நகர் விஜயந்த் காண்டில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பி குங்குமப்பூ பயிர்செய்கையில் ஈடுபட்டார்.
'அமெரிக்காவில் எனது வேலையை விட்டுவிட்டு திரும்பி வந்த பிறகு, நான் தனித்துவமான ஒன்றைச் செய்ய விரும்பினேன். ஆன்லைன் வீடியோவைப் பார்த்த பிறகு குங்குமப்பூவை வளர்க்கும் யோசனை எனக்கு வந்தது. லக்னோவில் அவ்வளவு பொருத்தமான நிலம் இல்லை என்பதை உணர்ந்தேன். நான் வீட்டில் முயற்சி செய்ய முடிவு செய்தேன்." என கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், 'காஷ்மீர் சென்று அங்குள்ள உள்ளூர் விவசாயிகளை சந்தித்து அவர்களின் முறைகள் குறித்து தெரிந்து கொண்டேன்.
லக்னோவில் கட்டுப்படுத்தப்பட்ட அமைப்பில் இதை என்னால் கண்டிப்பாக முயற்சி செய்ய முடியும் என்ற நம்பிக்கையை இது எனக்கு அளித்தது.
ஏரோபோனிக் முறையைப் பயன்படுத்தி, குளிரூட்டப்பட்ட கூடத்தில் குங்குமப்பூவை வளர்த்தார் ஸ்ரீவஸ்தவா, அங்கு மண் இல்லாமல் செடிகள் வளர்ந்து வருகின்றன.
ஏரோபோனிக் முறை என்றால் என்ன?
ஏரோபோனிக்ஸ் என்பது ஒரு உயர் தொழில்நுட்ப செயல்முறையாகும், இதில் தாவரங்கள் காற்றில் இருக்கும் மற்றும் அவற்றின் வேர்களுக்கு ஊட்டச்சத்துக்கள் கட்டுப்படுத்தப்பட்ட அமைப்பில் வழங்கப்படுகின்றன.
மேலும் அவர் கூறுகையில், 'இந்த முறைகளை இணைப்பதன் மூலம், குறைந்த இடத்தில் அதிக செடிகளை வளர்க்க முடிகிறது' என்றார். காஷ்மீரின் குளிர் காலநிலைக்கு ஏற்ற சூழலை உருவாக்கினார்.
'இந்தக் கட்டுப்பாட்டு அமைப்பில், ஒளிச்சேர்க்கைக்கு தேவையான சூரிய ஒளியை சிறிய அளவில் பெறுவதற்கு, இரண்டு மாதங்களுக்கு முன், இந்த செடிகளை இருளில் வைத்துள்ளோம்' எனவும் அவர் இது குறித்து விரிவுப்படுத்தினார்.
மேலும் இந்த அமைப்பில் குங்குமப்பூவை சிறிய அளவில் பயிரிட ரூ. 7 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை செலவாகும் என்று அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |