பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தலைவரின் இரகசிய பயணம்
1947யில் அக்டோபர் மாதம் 27ஆம் திகதி காலை, ஒரு DC3 விமானம் ஸ்ரீ நகரின் விமான நிலையத்தை நோக்கி பறந்து கொண்டிருந்தது.
ஆயுதம் தாங்கிய வீரர்கள் விமான ஓடுபாதையில், அந்த விமானத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர்.
அங்கிருந்து சுமார் 12 கிலோ மீற்றர் தொலைவில் இருந்த காஷ்மீர் எல்லையில் பதற்றம் உச்சத்தை தொட்டுக் கொண்டிருந்தது. அந்த விமானம் காஷ்மீரை பாதுகாக்க அனுப்பப்பட்டது.
அச்சமயம் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு, நீங்கள் ஸ்ரீ நகர் விமான நிலையத்தை சென்றடையும்போது, அது எதிரிகளின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிட்டிருந்தால் நடவடிக்கையை கைவிட்டு இந்தியா திரும்பி விடுங்கள் என கட்டளையிட்டார்.
அதன் பின்னர் 17 வீரர்கள் கொண்ட படை தளத்தில் கால் பதித்தது. அவர்களை தளத்தை உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து, சாரை சாரையாக இந்திய விமானங்கள் அங்கே தரையிறங்கின.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |