ஆறு ஆண்டுகால வலி.. டிரம்பிடம் தோற்றபோது கதறி அழுதேன்: முன்னாள் ஆளுநர்
2016ஆம் ஆண்டு குடியரசு கட்சியின் வேட்பாளர் போட்டியில் டொனால்டு டிரம்பிடம் தோல்வியுற்றதால் கதறி அழுத்ததாக, முன்னாள் ஒஹியோ ஆளுநர் ஜான் காசிச் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ஜான் காசிச், 2016ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தல் குறித்து மனம் திறந்துள்ளார். அந்த தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் ஜனாபதியில் தேர்தலில் போட்டியிடப்போவது யார் என்ற போட்டி நிலவியது.
அப்போது நிதி திரட்டுவதற்காக தான் விரைந்ததாகவும், குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் வேட்புமனுவை வெல்வதற்காக டிரம்ப் திட்டமிட்டிருந்தது குறித்து நன்றாக யோசித்ததாகவும் காசிச் கூறினார்.
மேலும் பேசிய அவர், 'நாங்கள் அவரை தடுக்கப் போகிறோம் என்றும், மக்களின் நினைவுக்கு நாங்கள் வருவோம் என்றும் உண்மையில் நம்பினோம். ஆனால் ஜூலை மாதம், கிளீவ்லேண்ட் மாநாட்டில் குடியரசுக் கட்சியின் வேட்புமனுவை டிரம்ப் அதிகாரப்பூர்வமாக எடுத்துக் கொண்டதால் அது நடக்கவில்லை.
அது முடிந்ததும் விமான நிலைய கட்டிடத்தின் பின்னால் அழுது கொண்டிருந்தேன். ஆனால் அதைப் பற்றி நான் யாரிடமும் கூறவில்லை. ஆறு ஆண்டுகளாக இன்னமும் அந்த விடயம் வலியை தருகிறது' என தெரிவித்துள்ளார்.
ஜான் காசிச், 2016ஆம் ஆண்டு மே 4ஆம் திகதி ஒஹியோவில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தபோது பாதியில் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.