இட ஒதுக்கீடு பெறுபவர்கள் கொலைகார பசங்களா? கஸ்தூரியின் பேச்சுக்கு ஆவேசமடைந்த வீரலட்சுமி
இட ஒதுக்கீடு தொடர்பாக நடிகை கஸ்தூரி பேசியதற்கு தமிழக மக்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வீரலட்சுமி கெடு விதித்துள்ளார்.
கஸ்தூரியின் சர்ச்சை பேச்சு
நடிகையும் , சமூக செயற்பாட்டாளருமான கஸ்தூரி சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். இவர், அரசியல் விமர்சகர் என்ற பெயரில் பல விவாதங்களிலும் கலந்து கொண்டுள்ளார்.
தற்போது, சமுக வலைதளங்களில் பாஜகவுக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், நேற்று முதல் கஸ்தூரி பேசிய கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அவர் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், இடஒதுக்கீடு பெறுபவர்கள் கொலைகாரர்கள் என்று சொன்னதாக தெரிகிறது. இவர் பேசிய கருத்து தற்போது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.
வீரலட்சுமி ஆவேசம்
இந்நிலையில், கஸ்தூரி பேசிய கருத்துக்கு தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி வீடியோ மூலம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் பேசிய வீடியோவில், "இட ஒதுக்கீடு பெறுபவர்கள் கொலைகார பசங்களா? இட ஒதுக்கீடு என்றால் என்னனு தெரியுமா? கொலைகார பசங்க டிக்கெட் வாங்கும் பணத்தில்தானே டிரஸ், சாப்பாடு, மேக்கப் பொருட்கள் எல்லாம் வாங்குகிறாய்?
தமிழ் மண்ணில் சமூக நீதிக்காகவும், இடஒதுக்கீட்டை பெறுவதற்காகவும் போராட்டம் செய்தவர்களின் வரலாறு தெரியுமா? என் குடும்பத்தில் இந்த கோட்டாவை பெறுவதற்காக 21 பேர் குண்டடி பட்டு வீரமரணம் அடைந்த வரலாறு தெரியுமா?
திருநங்கைகளையும் இப்படி தான் விமர்சித்தாய். இன்னும் 3 தினங்களில் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இல்லையென்றால் தமிழர் முன்னேற்றபடையினர் உன்னுடைய வீட்டை முற்றுகையிட்டு தக்க பாடத்தையும் புகட்டுவார்கள்" என்று ஆவேசமாக பேசியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |