ஹெலிகாப்டரில் ஏறும் போது தவறி விழுந்த மம்தா பானர்ஜி.., பரபரப்பை கிளப்பிய சம்பவம்
மேற்கு வாங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஹெலிகாப்டரில் ஏறும் போது இருக்கைக்கு அருகே தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் 2024 -ம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டு தீவிர பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. நேற்று இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்றது.
மேற்கு வங்க மாநிலத்தில் இருக்கும் 42 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களிலும் நடைபெறவிருக்கிறது.
மேற்கு வங்கத்தில் திருணாமூல் காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் பாஜக என மும்முனைப் போட்டி நிலவுவதால், அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
தவறி விழுந்த மம்தா பானர்ஜி
இந்நிலையில், மம்தா பானர்ஜி ஹெலிகாப்டரில் ஏறும் போது இருக்கைக்கு அருகே தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
அவர், மேற்கு வங்கத்தின் துர்காபூரில் இருந்து ஹெலிகாப்டரில் ஏற முயன்ற போது இருக்கைக்கு அருகே தவறி விழுந்துள்ளார்.
உடனே, அவரது உதவியாளர்கள் தூக்கி இருக்கையில் அமர வைத்துள்ளனர். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த மாதம் மம்தாவுக்கு வீட்டில் தவறி விழுந்ததில் அவரது நெற்றியில் ஆழமான வெட்டுக்காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |