தெலுங்கு பேசுபவர்கள் குறித்து சர்ச்சையாக பேசிய கஸ்தூரி.., உடனடியாக எடுத்த நடவடிக்கை
தெலுங்கு பேசுபவர்கள் குறித்து நடிகை கஸ்தூரி சர்ச்சையாக பேசிய நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்குப்பதிவு
வன்கொடுமை தடுப்புச் சட்டம் போல் பிராமணர்களைப் பாதுகாக்க ஒரு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சையாக பேசியது பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
இதையடுத்து, நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக கஸ்தூரி மன்னிப்பு கேட்கவேண்டும் என்று பாஜகவை சேர்ந்த அமர் பிரசாத் ரெட்டி கூறியிருந்தார்.
இதையடுத்து, தெலுங்கர்கள் குறித்து பேசியதற்காக நடிகை கஸ்தூரி வருத்தம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் கொடுத்த புகாரின் அடிப்படையில் எழும்பூர் காவல் நிலையத்தில் கஸ்தூரி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |