திமுகவை அடிப்பாங்கன்னு பார்த்தால்.. நடிகை கஸ்தூரி விமர்சனம்
தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் நடிகை கஸ்தூரி கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள்
இந்தியாவில் மக்களவை தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதில் இருந்து அரசியல் கட்சிகள் தீவிர பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
திமுக கூட்டணி கட்சிகள், அதிமுக கூட்டணி கட்சிகள், நாம் தமிழர் கட்சி மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் பிரச்சாரத்தின் போது ஒருவருக்கொருவர் காட்டமாக விமர்சித்து வருகின்றனர்.
இதில் அதிமுகவையும், பாஜகவையும் குற்றம் சாட்டி திமுகவினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். பாஜக கூட்டணியில் இருந்து விலகிய அதிமுக கட்சி, பாஜகவையும் திமுகவையும் குற்றம் சாட்டி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அதேபோல, சின்னம் விவகாரத்தில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக நாம் தமிழர் கட்சி பாஜகவை விமர்சிக்கிறது.
கஸ்தூரி பதிவு
இந்நிலையில் நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "திமுகவின் ஆட்சி, பணம், ஊடக பலத்தை முறியடிக்கும் வகையில் பாஜக, அதிமுக, நாதக மூவரும் கரம் கோர்த்து அடிப்பார்கள் என்று ஆசைப்பட்டால், ஒருத்தர் மாற்றி ஒருத்தர் அவர்களே அடித்துக்கொள்கிறார்கள்.
என்னத்த சொல்லுறது. திமுகவுக்கு எதிரான சக்திகள் ஒன்றுபடாத வரை தமிழகத்துக்கு விடிவில்லை" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |