அம்பானி வீட்டு திருமணமும் ஜாம்நகர் Airport சர்ச்சையும்!
இந்திய பணக்காரர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்காக ஜாம்நகர் விமான நிலையத்தை 12 நாள்களுக்கு மட்டும் இந்திய அரசு சர்வதேச அந்தஸ்து கொடுத்தது.
ஆனந்த் அம்பானி திருமணம்
Reliance Industries Ltd தலைவரும், நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு 2023 -ம் ஆண்டு ஜனவரியில் மும்பையில் உள்ள அன்டாலியா இல்லத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களின் திருமணம் வருகின்ற ஜூலை 12 -ம் திகதி மும்பையில் நடைபெற உள்ளது.
சிறு வயதில் ஜாம்நகரில் வளர்ந்ததால் திருமணத்தை அங்கு வைக்க வேண்டும் என்று ஆனந்த் அம்பானி தெரிவித்திருந்தார்.
இதனால், திருமண முந்தைய நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஜாம் நகருக்கு Mark Zuckerberg, Bill Gates, Shah Rukh Khan, Salman Khan, Janhvi Kapoor, Manushi Chillar, Rani Mukerji, Manish Malhotra, Ranveer Singh, Deepika Padukone, Alia Bhatt, Ranbir Kapoor, Atlee உள்ளிட்டோர் வந்தனர்.
இதனால், குஜராத்தின் ஜாம் நகர் விமான நிலையத்திற்கு மார்ச் 28 -ம் திகதி முதல் ஒரு வாரத்தில் 524 விமானங்கள் வந்தது. இதில், வெளிநாட்டில் இருந்து வந்த விமானங்கள் தான் அதிகம்.
தொடரும் சர்ச்சை
பயணிகள் விமான நிலையமாக இல்லாத ஜாம்நகர் விமான நிலையத்தை விமானப்படை பயன்படுத்தி வந்தது. ஆனால், அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சிக்காக பயணிகள் விமான நிலையமாக பயன்படுத்த விமான படை ஒப்புதல் வழங்கியது.
திருமண நிகழ்ச்சிக்காக ஜாம்நகரில் பிரத்யேகமாக பயணிகள் டெர்மினஸ் கட்டிடம் (Terminus Building), புதிய இமிக்ரேசன் (Immigration), சுங்க வரி கவுண்டர்கள் ஆகியவற்றை இந்திய விமான நிலைய ஆணையம் கட்டியது.
ஆனால், இதற்கு எவ்வளவு செலவானது என்பதை விமானப் போக்குவரத்து துறை தெரிவிக்கவில்லை. இதற்கான செலவை முகேஷ் அம்பானி கொடுத்தாரா அல்லது சொந்த பணத்தை அரசு கொடுத்துள்ளதா என்று சந்தேகம் எழுந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |