கணக்கு பாடம் கஷ்டம் என்றால் அதை நீக்கிவிட முடியுமா? மும்மொழிக்கொள்கை குறித்து கஸ்தூரி பேச்சு
தமிழக அரசியலில் மும்மொழிக்கொள்கை பெரும் விவாதமாக மாறிய நிலையில் நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார்.
வட மாநிலங்களில் மும்மொழிக்கொள்கை அமலில் உள்ளது. உத்தர பிரதேசம், பிஹார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, உத்தராகண்ட், இமாச்சால பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட் ஆகிய 9 மாநிலங்கள் இந்த கொள்கையை பின்பற்றுகின்றன.
இந்த மாநிலங்களில் உள்ள அரசு பள்ளிகளில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை மும்மொழி பின்பற்றப்படுகிறது. அவற்றில் ஆங்கிலமும், இந்தியும் கட்டாயப் பாடங்களாக உள்ளன.
ஆனால், தமிழக அரசு மும்மொழிக் கொள்கைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.
கஸ்தூரி பேசியது
இந்நிலையில்,தஞ்சாவூரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பங்கேற்ற நடிகை கஸ்தூரி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "மும்மொழிக்கொள்கையை பின்பற்றுவதில் மற்ற மாநிலங்களை தவிர தமிழகத்திற்கு தான் பிரச்சனையாக இருக்கிறது.
மொழி கற்பதை மாணவர்களுக்கு அழுத்தம் என்று கூறினால் பிற பாடங்களை எப்படி மாணவர்கள் படிக்க முடியும்?
கணக்கு பாடம் கஷ்டம் என்று அதனை பாடத்திட்டத்தில் இருந்து நீக்கிவிட முடியுமா? ஈஸியான முறையில் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க முடியுமே தவிர அதனை நீக்க முடியாது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |