டெஸ்டில் புதிய சாதனை... வங்க தேசத்தை மிரட்டிய இலங்கை வீரர்!
வங்க தேசத்தின் மிர்பூரில் நடந்து வரும் வங்க தேச அணிக்கு எதரான 2வது டெஸ்ட் போட்டியில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் கசுன் ரஜிதா புதிய சாதனை படைத்துள்ளார்.
வங்க தேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில், நேற்று இரு அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் மிர்பூரில் தொடங்கியது.
டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த வங்க தேச அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்திருந்து.
இன்று இரண்டாவது நாள் தொடர்ந்து விளையாடி வரும் வங்க தேச அணி, இலங்கை வேகப்பந்து வீச்சாளர் கசுன் ரஜிதா வீசிய 92 வது ஓவரில் 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
முதல் நாள் ஏற்கனவே 3 விக்கெட் எடுத்திருந்த கசுன், 2வது நாள் மேலும் இரண்டை கைப்பற்றி, முதல் இன்னிங்ஸில் மட்டும் 5 விக்கெட்டுகளை சாய்த்து சாதனை படைத்துள்ளார்.
வங்க தேசத்தில் வங்க தேச அணிக்கு எதிராக டெஸ்ட் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை எடுத்த முதல் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை கசுன் படைத்துள்ளார்.
— cric fun (@cric12222) May 24, 2022
நெஞ்சை பிடித்தபடி மைதானத்திலிருந்து வெளியேறிய இலங்கை வீரர் குசால் மெண்டீஸ் மருத்துவமனையில் அனுமதி!
மஹ்முதுல் ஹசன் ஜோய், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ் மற்றும் மொசாடெக் ஹொசைன் ஆகியோரின் விக்கெட்டுகளை கசுன் ராஜித கைப்பற்றினார்.
— cric fun (@cric12222) May 23, 2022