நெஞ்சை பிடித்தபடி மைதானத்திலிருந்து வெளியேறிய இலங்கை வீரர் குசால் மெண்டீஸ் மருத்துவமனையில் அனுமதி!
நெஞ்சை பிடித்த படி மைதானத்திலிருந்து வெளியேறிய இலங்கை வீரர் குசால் மெண்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வங்க தேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
முதல் டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில், இன்று இரு அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் மிர்பூரில் தொடங்கியது.
டாஸ் வென்ற வங்க தேச அணி முதல் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.
உணவு இடைவேளைக்கு முன் இலங்கை வீரர் குசால் மெண்டிஸ் நெஞ்சை பிடித்த படி மைதானத்திலிருந்து வெளியேறினார்.
இந்நிலையில், குசால் மெண்டிஸ் டாக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மெண்டிஸ் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு முன்னெச்சரிக்கை பரிசோதனைக்காக நகர மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆரம்பத்தில் இலங்கை அணியின் பிசியோ ஸ்ட்ரெச்சரைக் கேட்டார், ஆனால் குசால் பின்னர் மைதானத்தை விட்டு நடந்தே வெளியேறினார்.
இது வெறும் தசை வலி என்று இலங்கை அணி நிர்வாகம் யூகிக்கிறது என வங்க தேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.