கேட் மிடில்டனின் தைரியத்தை பாராட்டுகிறேன்! மன்னர் சார்லஸ் வெளியிட்ட அறிக்கை
பிரித்தானியாவின் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டனுக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மன்னர் சார்லஸ் இளவரசி கேட்டின் துணிச்சலைப் பாராட்டியுள்ளார்.
பிரித்தானிய இளவரசி கேட்டிற்கு புற்றுநோய்
பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், தனக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
அந்த வீடியோவில், கடந்த ஜனவரியில் வயிற்றுப் பகுதியில்(Major Abdominal) அறுவை சிகிச்சை செய்து கொண்ட போது புற்றுநோய் பாதிப்பு இல்லை என்றும், ஆனால், பின்னர் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது என தெரிவித்துள்ளார்.
இது தங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்ததாகவும், . தங்களது குடும்பத்தினரைப் பாதுகாக்கும் நோக்கில், இந்த விஷயத்தை தனிப்பட்ட முறையில் சமாளித்து வருவதாகவும் அவர் கூறினார்.
மன்னர் சார்லஸ் பாராட்டு
இந்நிலையில் புற்றுநோய் பாதிப்பு குறித்து வெளிப்படுத்திய இளவரசி கேட் மிடில்டனின் தைரியத்தை பாராட்டுகிறேன் என மன்னர் சார்லஸ் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டனை பாராட்டியுள்ளார்.
கடந்த சில வாரங்களாக வேல்ஸ் இளவரசி கேட் மருத்துவமனையில் இருந்தபோது தனது நெருக்கமான மற்றும் அன்பான மருமகளுடன் மன்னர் சார்லஸ் தொடர்பில் இருந்ததாகவும் பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த இக்கட்டான நேரத்தில் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமீலா தங்களது அன்பையும், ஆதரவையும் தொடர்ந்து வழங்குவர் என்று தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Kate Middleton cancer announcement,
UK King Charles,
Kate cancer diagnosis,
Buckingham Palace statement,
Princess of Wales chemotherapy,
Royal family health,