சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வெறித்தனமான ரசிகையாக இருக்கும் பிரபல பிரித்தானிய பெண்! யார் அவர்?
பிரித்தானியாவை சேர்ந்த பெண்கள் கிரிக்கெட் அணி வீராங்கனை கேட் கிராஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெறித்தனமான ரசிகையாக இருக்கிறார்.
இங்கிலாந்து மகளிர் அணியின் வேகப்பந்துவீச்சாளர் கேட் கிராஸ் தொடர்ந்து சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார்.
டோனியின் அதி தீவிர ரசிகையான இவர் தமிழ்ப்புத்தாண்டு அன்று, ‘இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்’ என்று தமிழிலேயே ட்வீட் செய்து அசத்தினார்.
அதே போல நேற்றைய போட்டிக்கு முன், சென்னை சூப்பர் கிங்ஸுக்கு பெரிய விசில் அடிங்க என்று தங்கிலீஷில் ட்வீட் செய்திருக்கிறார்.
தொடர்ந்து சென்னை அணிக்கு ஆதரவான பதிவுகளை போட்டு வரும் அவர், தனக்கு பிடித்த அணியை கிண்டல் செய்பவர்களையும் டுவிட்டரில் ஒரு கை பார்த்து விடுகிறார்.
மிதவேகப்பந்துவீச்சாளரான கேட் கிராஸ் கடந்த 8 ஆண்டுகளாக இங்கிலாந்து அணிக்கு ஆடிவருகிறார். இதுவரை 3 டெஸ்ட், 28 ஒருநாள், 13 டி20 என 44 சர்வதேச போட்டிகளில் விளையடியிருக்கிறார்.
Chennai Super Kings ku Periya Whistle adinga. ?? #WhistlePodu
— Kate Cross (@katecross16) April 19, 2021