வரலாற்று முக்கியத்துவமுள்ள பொறுப்பை ஏற்கும் இளவரசி கேட் மிடில்டன்
வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன், தன்னுடைய அர்ப்பணிக்கப்பட்ட பொது பணிகளுக்கு திரும்பி வருவதுடன், வரலாற்று முக்கியத்துவமுள்ள புதிய பொறுப்பை ஏற்கிறார்.
கடந்த ஆண்டு அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது சிகிச்சைகள் முடிவடைந்த பின், தன்னுடைய பொறுப்புகளை அதிகரித்து வருகிறார்.
கேட் மிடில்டன் இப்போது ராயல் வாரண்ட் (Royal Warrent) வழங்கும் உரிமையைப் பெற உள்ளார்.
இது பிரித்தானியாவில் உள்ள நிறுவனங்கள், ராஜகுடும்பத்துக்கான பொருட்களை வழங்குவதை அங்கீகரிக்கும் விருதாகும்.
வேல்ஸ் இளவரசியாக இருக்கும் ஒருவர் இப்பொறுப்பை பெறுவது, பிரித்தானிய அரச வரலாற்றில் இது இரண்டாவது முறையாகவும்.
அதாவது தனது கணவர் பிரித்தானியாவின் மன்னராக முடிசூடப்படுவதற்கு முன்பே ராயல் வாரண்ட் வழங்கும் உரிமையை பெரும் இரண்டாவது இளவரசரை கேட் மிடில்டன் ஆவார்.
முன்னதாக 1910-ஆம் ஆண்டில், தனது கணவர் மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் அரியணை ஏறுவதற்கு முன்பு ராணி மேரிக்கு இந்த வாரண்டுகளை வழங்கும் உரிமை வழங்கப்பட்டது.
ராயல் வாரண்டின் முக்கியத்துவம்
- இவ்வாரண்டுகள், குறைந்தது 5 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும்.
- இதன் மூலம் நிறுவனங்கள் Royal Warrant Holders Association உறுப்பினராக தங்களை நிலைநிறுத்திக் கொள்ளலாம்.
- மேலும், நிறுவனங்கள் தங்களுடைய விளம்பரங்களில் அரச முத்திரைகளை (Royal Arms) பயன்படுத்த அனுமதி பெறுகின்றன.
கேட் மிடில்டனின் பங்கு
இந்த புது பொறுப்பு, அவரது வரலாற்றில் ஒரு முக்கிய அத்தியாயமாகும்.
ராயல் வாரண்ட் வழங்குவதன் மூலமாக, பிரித்தானியாவின் திறன்களை மற்றும் கைத்தொழில்களை கௌரவிக்க கேட் ஆர்வமாக இருக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேட் மிடில்டன் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் பிராண்டுகள் மிகுந்த பிரபலமடைவதற்கான காரணமாக இது கேட் எஃபெக்ட் எனக் கூறப்படுகிறது.
இந்த புதிய முடிவுகள் பிரித்தானிய நிறுவனங்களுக்கு பெரும் ஊக்கம் அளிக்கக் கூடியவையாக இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |