ராஜ குடும்பத்திலேயே இப்போது பிரபலமானவர் யார்? ஆய்வு முடிவுகள்
பிரித்தானிய ராஜ குடும்ப உறுப்பினர்களின் யார் பிரபலமானவர் என்னும் விடயம் மாறிக்கொண்டே இருக்கும் ஒரு விடயமாகும்.
ராஜ குடும்பத்திலேயே இப்போது பிரபலமானவர் யார்?
அவ்வகையில், இப்போது ராஜ குடும்பத்திலேயே பிரபலமானவர் யார் என்பதை அறிய ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
Ipsos என்னும் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், ராஜ குடும்பத்திலேயே இப்போது பிரபலமானவர், இளவரசி கேட் மிடில்டன்தான் என தெரியவந்துள்ளது.
Image: chris jackson
தனது கணவரான இளவரசர் வில்லியமை முந்தி, இளவரசி கேட் பிரபலமான ராஜ குடும்பத்தினர் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
ஆய்வில் பங்கேற்றவர்களில் 38 சதவிகிதம் மக்கள், கேட்தான் ராஜ குடும்பத்திலேயே தங்களுக்கு மிகவும் பிடித்தமானவர் என்று கூறியுள்ளார்கள்.
கணவரையும் மன்னரையும் முந்திய கேட்
கேட்டின் கணவரான இளவரசர் வில்லியமே, பட்டியலில் இரண்டாவது இடத்தில்தான் இருக்கிறார். அவருக்கு 34 சதவிகிதத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.
Image: Shutterstock
ராஜ குடும்ப குட்டி இளவரசர்களுக்கு மூன்றாவது இடத்தைக் கொடுத்துள்ள மக்கள் 27 சதவிகிதம் பேர். 25 சதவிகித ஆதரவு பெற்று நான்காவது இடத்தைப் பெற்றிருப்பவர் இளவரசி ஆன், மன்னர் சார்லசோ, 20 சதவிகித மக்கள் ஆதரவைத்தான் பெற்றுள்ளார்.
ஆக, தன் கணவரான இளவரசர் வில்லியம், மற்றும் மன்னர் சார்லஸ் ஆகியோரையும் முந்தி, 38 சதவிகித மக்கள் ஆதரவுடன், பிரபலமான ராஜ குடும்பத்தினர் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார் இளவரசி கேட்.
Image: File
Image: MEGA