எப்ஸ்டீன் ஆவணங்களுக்கு முன்பே... பீட்ரைஸ் மற்றும் யூஜெனியை விட்டு விலகிய இளவரசி கேட்
ஆண்ட்ரூவின் பிள்ளைகளான பீட்ரைஸ் மற்றும் யூஜெனி தொடர்பில் வேல்ஸ் இளவரசர் மற்றும் இலவரசிக்கு ஏற்கனவே சங்கடமான உறவு இருந்துவந்த நிலையில், தற்போது எப்ஸ்டீன் ஆவணங்கள் மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என்றே கூறப்படுகிறது.
பீட்ரைஸ் விரும்பியதாக எப்ஸ்டீன்
எப்ஸ்டீன் ஆவணங்கள் அம்பலாமகும் பல காலம் முன்பே, இந்த நால்வருக்கும் இடையே சுமூகமான உறவு இருந்ததில்லை.

ஆண்ட்ரூ மகள்கள் இருவருக்கும், எப்ஸ்டீன் உடனான அவர்களின் பெற்றோரின் தொடர்புகள் பற்றி எந்த அளவுக்குத் தெரியும் என்பது குறித்து சமீபத்திய ஆவணத் தொகுப்பு கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.
2015ல் நண்பர் ஒருவருக்கு எப்ஸ்டீன் அனுப்பிய மின்னஞ்சலில், பீட்ரைஸ் தம்மை விரும்பியதாக குறிப்பிட்டுள்ளார். 2019 ஆம் ஆண்டு பத்திரிகைக்கு ஆண்ட்ரூ அளித்த பேரழிவு தரும் நேர்காணலில் இருந்து அவர் தப்பிக்க உதவுவதில் பீட்ரைஸ் முக்கிய பங்கு வகித்தார்.
மேலும் பீட்ரைஸும் யூஜெனியும் தற்போது எப்ஸ்டீன் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் அரச குடும்பத்திலிருந்தும் வெளியேற்றப்படுவதற்கான சாத்தியத்தை எதிர்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கடும் நடவடிக்கை
ஆண்ட்ரூவின் இராணுவ, அரச குடும்ப பட்டங்களை சார்லஸ் மன்னர் பறித்தது போன்று, பீட்ரைஸ் மற்றும் யூஜெனி தொடர்பில் வேல்ஸ் இளவரசர் வில்லியம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றே கோரிக்கை எழுந்துள்ளது.
எப்ஸ்டீன் விவகாரத்தில் பீட்ரைஸ் மற்றும் யூஜெனி தொடர்பில் அரச குடும்பம் உன்னிப்பாக கவனித்து வருவதாகவே தகவல் வெளியாகியுள்ளது. மட்டுமின்றி, பீட்ரைஸ் மற்றும் யூஜெனி மீது ஏற்கனவே கேட் மிடில்டன் நல்ல உறவில் இல்லை என்றே கூறுகின்றனர்.

மேலும், ஹரி - மேகன் தம்பதி அரச குடும்பத்தில் இருந்து வெளியேறியதன் பின்னர் யூஜெனி அவர்களுடன் நெருக்கமாக பழகி வந்தது கேட் மிடில்டனை கோபப்பட வைத்துள்ளது.
அதன் பின்னர் அந்த இரு சகோதரிகளிடம் இருந்து கேட் மிடில்டன் விலகியே இருந்து வந்துள்ளார். வில்லியம் மீதான நெருக்கத்தைவிட யூஜெனி ஹரி மீது அதிக பாசம் கொண்டவராகவும் இருந்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |