ராணியின் இறப்பில் இளவரசர் ஜார்ஜ், லூயிஸ் மற்றும் சார்லோட்: அரச வாரிசுகளின் உணர்வை வெளிபடுத்திய இளவரசி கேட்
ராணியின் மறைவு சீக்கிரம் வந்துவிட்டதே என உணர்ச்சி பொங்கிய அரச வாரிசுகள்.
இறுதிச் சடங்குகளில் உதவிய உதவியாளர்களை வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் இருவரும் சந்தித்தனர்.
ராணியின் மறைவில் இளவரசர் ஜார்ஜ், இளவரசர் லூயிஸ் மற்றும் இளவரசி சார்லோட் ஆகியோர் கண்ணீர் நிறைந்து காணப்பட்டனர் என வேல்ஸ் இளவரசி கேட் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவை 70 ஆண்டுகள் வரை ஆட்சி புரிந்த மகாராணி இரண்டாம் எலிசபெத் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரலில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.
அதை தொடர்ந்து அவரது இறுதிச் சடங்கு கடந்த திங்கட்கிழமை வெஸ்மின்ஸ்டர் அபேயில் நடைபெற்று முடிந்தது.
WireImage
இந்நிலையில் மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதி சடங்குகளில் உதவிய உதவியாளர்களை வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் இருவரும் பெர்க்ஷயரில் உள்ள விண்ட்சர் கில்டால் சந்தித்து பேசினார்.
அப்போது ராணியின் மரணத்தில் இளவரசர் ஜார்ஜ், இளவரசர் லூயிஸ் மற்றும் இளவரசி சார்லோட் ஆகியோரின் மனநிலை குறித்து வேல்ஸ் இளவரசி கேட் வெளிபடுத்தினார்.
ராணியின் இறப்பை இளவரசர் ஜார்ஜ், இளவரசி சார்லோட் மற்றும் இளவரசர் லூயிஸ் ஆகியோரிடம் தெரிவித்த போது, அவர்கள் ராணிக்கு ஏன் இவ்வளவு சீக்கிரம் வந்துவிட்டது எனத் தெரிவித்தாக கூறினார்.
PA
மேலும் ஏன் பாதுகாப்புக்காக ட்ரோன்கள் ஏன் பறக்கின்றன என்று கேட்டத்துடன், ராணி இறந்ததை அறிந்த போது கண்ணீர் நிறைந்து காணப்பட்டனர் எனவும் கேட் தெரிவித்தார்.
கூடுதல் செய்திகளுக்கு: போர் நிறுத்தம் மற்றும் பணவீக்க நெருக்கடிக்கு சமாதானம் ஒன்றே தீர்வு: ஹங்கேரிய அமைச்சர் கருத்து
இறுதிச் சடங்கின் சம்பிரதாயக் கூறுகளுக்காக அதிகாலை 3 மணிக்கு நடக்கும் ஒத்திகைகளில் ஏதேனும் ஒன்றை குடும்பத்தினர் கேட்டிருக்கிறீர்களா என்று கேட்டதற்கு, நாங்கள் அதைக் கேட்கவில்லை, இருப்பினும் அதை நான் விரும்பினேன் இளவரசி கேட் தெரிவித்துள்ளார்.
Getty Images