போர் நிறுத்தம் மற்றும் பணவீக்க நெருக்கடிக்கு சமாதானம் ஒன்றே தீர்வு: ஹங்கேரிய அமைச்சர் கருத்து
ரஷ்யாவின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளே உலக பொருளாதார நெருக்கடிக்கு காரணம்.
சமாதானம் ஒன்றே பணவீக்கம் நெருக்கடி மற்றும் உக்ரைன் போர் ஆகியவற்றிக்கு தீர்வு.
பணவீக்கம் அழுத்தம் மற்றும் உக்ரைன் போர் ஆகியவற்றிக்கு முடிவு கட்டுவதற்கான ஒரே வழி சமாதானம் தான் என்று ஹங்கேரிய வெளியுறவுத்துறை அமைச்சர் Peter Szijjarto வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் மற்றும் சீனா தைவான் இடையிலான பதற்றமான சூழ்நிலை ஆகியவற்றால் உலக அளவில் பணவீக்க அழுத்தம் மற்றும் பொருளாதார நெருக்கடி போன்றவை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், நியூயார்க் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் கூட்டத்தில் ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஹங்கேரிய வெளியுறவு அமைச்சர் Peter Szijjarto சந்தித்து பேசினார்.
இதனைத் தொடர்ந்து, அவர் தெரிவித்த தகவலில் மாஸ்கோவிற்கு எதிரான பொருளாதார தடைகளின் நேரடி விளைவு தான் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி என்று தெரிவித்தார்.
ஹங்கேரிக்கு டர்கிஷ் ஸ்ட்ரீம் பைப்லைன் மூலம் தற்போது உள்ள ஒப்பந்தத்தின் மூலம் கணிக்கப்பட்டதை விட தினசரி அடிப்படையில் விநியோகம் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
EPA
கூடுதல் செய்திகளுக்கு: ஹாரியை இளவரசர் வில்லியமால் மன்னிக்க முடியாது: அரச எழுத்தாளர் முக்கிய தகவல்
அத்துடன் ஹங்கேரிய வெளியுறவு அமைச்சர் தனது வீடியோ செய்தியில், ரஷ்ய எரிசக்தி நிறுவனமான காஸ்ப்ரோமுடன் நாட்டின் ஒத்துழைப்பைப் பாராட்டினார்.
மேலும் எந்தவொரு ஹங்கேரிய வீடு, குடும்பம் அல்லது வணிகம் எரிவாயு மற்றும் எண்ணெய் பொருட்களைப் பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளும் சூழ்நிலையைத் தடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்று கூறினார்.