பிற பெண்களிடமிருந்து இளவரசர் வில்லியமை காக்க…கேட் மிடில்டன் பயன்படுத்திய தந்திரம்
இளவரசர் வில்லியமை காப்பாற்ற கேட் ஒரு புத்திசாலித்தனமான தந்திரம் ஒன்றை கண்டுபிடித்தார்.
கேட்டின் உதவிக்காக இளவரசர் வில்லியம் மிகவும் நன்றியுள்ளவனாக இருந்தார்.
இளவரசர் வில்லியமை பல்கலைக்கழகத்தில் மற்ற பெண்களிடம் இருந்து காப்பாற்றுவதற்காக இளவரசி கேட் மிடில்டன் புத்திசாலித்தனமான தந்திரத்தை பயன்படுத்தியுள்ளார்.
பிரித்தானியாவின் வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் மிடில்டன் இருவரின் புகழ்பெற்ற காதல் கதை ஸ்காட்லாந்தில் உள்ள செயிண்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் தொடங்கியது.
Getty Image
கேட் மற்றும் வில்லியம் இருவரும் காதல் உறவில் ஈடுபடுவதற்கு முன்பு மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர், அப்போது எந்தவொரு நல்ல துணையும் செய்வது போலவே மோசமான சூழ்நிலையில் இளவரசர் வில்லியமை காப்பாற்ற கேட் ஒரு புத்திசாலித்தனமான தந்திரம் ஒன்றை கண்டுபிடித்தார்.
கேட் தி ஃபியூச்சர் குயின் என்ற தனது புத்தகத்திற்காக அரச நிபுணர் கேட்டி நிக்கோலிடம் வேல்ஸ் இளவரசியின் பரஸ்பர தோழி லாரா வார்ஷாவர் தெரிவித்த தகவலில், விருந்து ஒன்றில் இளவரசர் வில்லியம் பெண் ஒருவரால் மிகவும் சங்கடத்திற்கு உள்ளானார்.
மேலும் அவர் அப்போது கண்ணியமாக நடந்து கொண்டார் என குறிப்பிட்டார்.
SplashNews.com
அப்போது திடீரென கேட் வில்லையமை பின்னால் வந்து கைகளால் சுற்றி வளைத்தார், இதனை உடனடியாக உணர்ந்து கொண்ட வில்லியம் அந்த பெண்ணிடம் 'ஓ, மன்னிக்கவும், ஆனால் எனக்கு ஒரு காதலி உள்ளார் என தெரிவித்துவிட்டு சிரித்துக் கொண்டே சென்றனர் எனத் தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைனுடனான மோதலை தீர்க்க ரஷ்யா தயாராக உள்ளது: செர்ஜி லாவ்ரோவ் அறிவிப்பு
மேலும் லாராவின் கூற்றுப்படி, கேட்டின் உதவிக்காக வில்லியம் மிகவும் நன்றியுள்ளவனாக இருந்தார் மற்றும் அதற்காக கேட்டிடம் வில்லியம் நன்றியும் தெரிவித்தார் என தெரிவித்துள்ளார்.