உக்ரைனுடனான மோதலை தீர்க்க ரஷ்யா தயாராக உள்ளது: செர்ஜி லாவ்ரோவ் அறிவிப்பு
மேற்கத்திய பங்காளிகளின் முன்மொழிவுகளை கேட்க நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்.
புடின் பதவியில் இல்லை என்றால் மட்டுமே பேச்சுவார்த்தை ஜெலென்ஸ்கி அறிவிப்பு.
உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், பல மாதங்களாக நீடித்த மோதலை தீர்க்கவும் ரஷ்யா தயாராக இருப்பதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையானது 250 நாட்களுக்கு மேலாக நீடித்து வரும் நிலையில், போர் நடவடிக்கை நிறுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட மூன்று சுற்று பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில், உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், பல மாதங்களாக நீடித்த மோதலை தீர்க்கவும் ரஷ்யா தயார் நிலையில் இருப்பதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் பேச்சுவார்த்தைகளுக்கு ஜனாதிபதி புடின் உட்பட மொத்த ரஷ்யாவும் தயார் நிலையில் மாறாமல் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் எங்களது மேற்கத்திய பங்காளிகள் பதட்டங்களை குறைக்க என்ன முன்மொழிவுகளை தெரிவிக்க உள்ளனர் என்பதை கேட்க நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம் என செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
Getty
கூடுதல் செய்திகளுக்கு: ரஷ்யாவின் குற்றச்சாட்டில் அடிப்படை இல்லை: பிரித்தானியாவிற்கு துணை நின்ற பிரான்ஸ்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் அமைதி பேச்சுவார்த்தை குறித்து சில வாரங்களுக்கு முன்பு கருத்து தெரிவித்து இருந்த உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, ரஷ்யாவுடன் பேச்சு வார்த்தைகளை திறக்கும் ஒரே வழி, விளாடிமிர் புடின் அவரது ரஷ்ய ஜனாதிபதி பதவியில் இல்லை என்றால் மட்டுமே மேற்கொள்ளப்படும் என தெரிவித்து இருந்தார்.