ரஷ்யாவின் குற்றச்சாட்டில் அடிப்படை இல்லை: பிரித்தானியாவிற்கு துணை நின்ற பிரான்ஸ்
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாயில் ஏற்பட்ட வெடிப்புக்கு பின்னால் பிரித்தானியா இருப்பதாக ரஷ்யா குற்றச்சாட்டு.
எந்த அடிப்படையும் இல்லை என பிரித்தானிய மீதான குற்றச்சாட்டுக்கு பிரான்ஸ் மறுப்பு.
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாயில் ஏற்பட்ட வெடிப்புக்கு பின்னால் பிரித்தானியா இருப்பதாக ரஷ்யா தெரிவித்து இருந்த குற்றச்சாட்டுக்கு அடித்தளம் இல்லை என பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 26ம் திகதி ரஷ்யாவில் இருந்து ஜேர்மனிக்கு கடல் வழியாக எரிவாயுவை கொண்டு செல்லும் நோர்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் நோர்ட் ஸ்ட்ரீம் 2 எரிவாயு குழாயில் மிகப்பெரிய வெடிப்பு ஏற்பட்டது.
எரிவாயு குழாயில் ஏற்பட்ட இந்த வெடிப்பு கசிவு உலக நாடுகள் மத்தியில் பதற்றத்தை அதிகரித்து, அத்துடன் வெடிப்பு துளைகளின் எண்ணிக்கையானது நான்கு இடங்களில் உறுதிசெய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து வெடிப்பு நடந்த ஒரு வாரத்திற்கு பிறகு நீர் மற்றும் வாயுவின் அழுத்தம் ஒரு சமநிலையை அடைந்த போது வாயு கசிவு நிறுத்தப்பட்டது.
இந்த கசிவுக்கு ரஷ்யாவே காரணம் என உலக நாடுகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், நோர்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் நோர்ட் ஸ்ட்ரீம் 2 எரிவாயு குழாய்களை பிரித்தானிய கடற்படையே வெடிக்க செய்து இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை குற்றம்சாட்டி இருந்தது.
மேலும் நோர்ட் ஸ்ட்ரீம் பைப்லைன் (Nord Stream gas pipeline) மீதான பயங்கரவாத தாக்குதலில் பிரித்தானிய நிபுணர் குழுவின் ஒற்றை பிரிவு ஈடுபட்டதாகவும், இந்த பிரிவே சதி ஏற்பாடு மற்றும் அதனை செயல்படுத்தியதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது.
இதற்கு பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் முற்றிலுமாக மறுப்பு தெரிவித்து இருந்தது. இந்நிலையில், நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாயில் ஏற்பட்ட வெடிப்புக்கு பின்னால் பிரித்தானியா இருப்பதாக ரஷ்யா முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கு எந்த அடிப்படையும் இல்லை என பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பிரான்ஸ் வெளியுறவுத்துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட குறிப்பில், நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் கிரிமியா உள்ள ரஷ்ய கடற்படை கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இரண்டுக்கும் பிரித்தானியாவே காரணம் என்ற ரஷ்யாவின் குற்றச்சாட்டில் எந்த அடித்தளமும் இல்லை என தெரிவித்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: பேட்ஸ்மேன் முகத்தை பதம் பார்த்த பாகிஸ்தான் வீரரின் வேகப்பந்து: வீடியோ காட்சி
iStock
மேலும் உக்ரைன் மீதான அத்துமீறிய தாக்குதல் கவனத்தை திசை திருப்ப இந்த குற்றச்சாட்டு ரஷ்யாவின் தந்திரங்களின் ஒரு பகுதியாக உள்ளது என அமைச்சகத்தின் இணை செய்தி தொடர்பாளர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.