பேட்ஸ்மேன் முகத்தை பதம் பார்த்த பாகிஸ்தான் வீரரின் வேகப்பந்து: வீடியோ காட்சி
ஹரிஸ் ரவூஃப் வீசிய ஆறாவது ஓவரின் கடைசி பந்து நெதர்லாந்து பேட்ஸ்மேன் பாஸ் டி லீடேவின் ஹெல்மெட்டை பலமாக தாக்கியது.
பாஸ் டி லீடேவிற்கு வலது கண்ணுக்கு கீழ் கன்னத்தில் சிறிய வெட்டு ஏற்பட்டது கேமராக்கள் காட்டியது.
டி20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் வீரர் ஹரிஸ் ரவூஃப்(Haris Rauf's) வீசிய பந்து நெதர்லாந்து பேட்ஸ்மேன் பாஸ் டி லீடேவின் ஹெல்மெட்டை தாக்கியது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை போட்டியின் சூப்பர் 12 சுற்றி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் ஞாயிற்றுக்கிழமையான இன்று மோதின.
இந்த போட்டியில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரவூஃப் வீசிய ஆறாவது ஓவரின் கடைசி பந்து நெதர்லாந்து பேட்ஸ்மேன் பாஸ் டி லீடேவின் (Bas de Leede ) ஹெல்மெட்டை பலமாக தாக்கியது.
Haris rauf's bouncer ?.
— Intro Vert (@cageddbird) October 30, 2022
Haris Rauf's nasty delivery hits Bas de Leede on the grille in front of the nose
There's a cut on his face, just under his left eye .#T20WorldCup2022 #PAKvsNED pic.twitter.com/XslpYkPWFk
142 கி மீ வேகத்தில் வீசப்பட்ட பந்து, மைதானத்தின் நடுப்பகுதியில் பட்டு நல்ல உயரத்திற்கு பவுன்ஸ் ஆகவே அது நெதர்லாந்து பேட்ஸ்மேன் பாஸ் டி லீடே ஹெல்மெட்டின் தடுப்பு கம்பிகளை கடந்து அவரது தலையை தாக்கியது.
உடனடியாக அவர் தனது ஹெல்மெட்டை கழட்டவே, அருகில் இருந்த பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் உடனடியாக உதவிக்காக நெதர்லாந்து மருத்துவ குழுவை அழைத்தார்.
பேட்ஸ்மேன் பாஸ் டி லீடேவை பரிசோதித்த மருத்துவர்கள், சிகிச்சை மற்றும் பரிசோதனைகளுக்காக பெர்த்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதற்கிடையில் பாஸ் டி லீடேவிற்கு வலது கண்ணுக்கு கீழ் கன்னத்தில் சிறிய வெட்டு ஏற்பட்டது கேமராக்கள் காட்டியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவர் அடுத்த போட்டியில் களமிறங்குவாரா இல்லையா என்பது மருத்துவர்களின் முழுமையான பரிசோதனைக்கு பிறகே தெரியவரும்.
Netherland’s Bas de Leede got injured badly while facing Haris Rauf ?
— Sportskeeda (@Sportskeeda) October 30, 2022
Hoping for his quick recovery ??#pakvsned #t20worldcup #cricket pic.twitter.com/i2b4O0J5Rz
கூடுதல் செய்திகளுக்கு: பிரித்தானிய பொருளாதாரத்தை நிர்வகிக்க ரிஷி சுனக் சிறந்தவர்: கருத்துக்கணிப்புகளில் மக்கள் நம்பிக்கை
போட்டியின் ஆரம்பம் முதலே பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களின் வேகப்பந்தை நெதர்லாந்து வீரர்கள் எதிர்கொள்ள சிரமப்பட்ட நிலையில், நெதர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 91 ஓட்டங்கள் குவித்தது. 92 ஓட்டங்கள் இலக்குடன் தற்போது பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்து வருகிறது.