பிரித்தானிய பொருளாதாரத்தை நிர்வகிக்க ரிஷி சுனக் சிறந்தவர்: கருத்துக்கணிப்புகளில் மக்கள் நம்பிக்கை
பொருளாதாரத்தை நிர்வாகிக்க அதிகம் நம்பப்படும் தலைவராக பிரதமர் ரிஷி சுனக் தேர்வு.
31% பேர் புதிய பிரதமர் ரிஷி சுனக்கின் வேலைகளை ஆதரித்துள்ளனர்.
பிரித்தானிய பொருளாதாரத்தை திறமையாக நிர்வாகிக்க அதிகம் நம்பப்படும் தலைவராக பிரதமர் ரிஷி சுனக் இருப்பதாக கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.
அப்சர்வருக்கான (Observer) ஓபினியம் கருத்துக்கணிப்புகள் வழங்கிய தகவலின் அடிப்படையில், பிரித்தானியாவின் பொருளாதாரத்தை திறமையாக நிர்வகிப்பதில் தொழிலாளர் கட்சி தலைவர் கெய்ர் ஸ்டார்மரை (Kier Starmer) விட கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் மற்றும் பிரித்தானியாவின் புதிய பிரதமர் ரிஷி சுனக் ( Rishi Sunak) திறமையானவர் என மக்கள் நம்புவதாக தெரியவந்துள்ளது.
இந்த கருத்துக்கணிப்பில் ரிஷி சுனக் தலைமையிலான அரசுக்கு 33% ஆதரவும், தொழிலாளர் கட்சி தலைவர் கெய்ர் ஸ்டார்மருக்கு 29% ஆதரவும் கிடைத்துள்ளது.
இவற்றை கடந்த வார கருத்துக்கணிப்புகளுடன் ஒப்பிடுகையில் தொழிலாளர் கட்சி தலைவர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் முந்தைய கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் லிஸ் டிரஸ் இடையே 39% முதல் 11%மாக இருந்தது. இருப்பினும் ஓட்டு மொத்த பிரித்தானிய மக்களின் ஆதரவு 44% தொழிலாளர் கட்சிக்கு கருத்துக்கணிப்பில் கிடைத்து இருந்தது.
இவை கடந்த வாரத்தில் இருந்து தற்போது 6 புள்ளிகள் சரிந்தும் மக்களின் மனதில் முன்னிலையில் இருப்பதால் அதன் உறுப்பினர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
ரிஷி சுனக் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவராக ரிஷி சுனக் பதவியேற்றதை தொடர்ந்து 28%-மாக இருந்த டோரிகளின் ஆதரவு 5 புள்ளிகள் அதிகரித்துள்ளன.
கூடுதல் செய்திகளுக்கு: தயவு செய்து உதவி கேளுங்கள்: அடிமைத்தனம் குறித்து இளவரசி கேட் மிடில்டனின் புதிய வீடியோ
மேலும் 31% பேர் புதிய பிரதமர் ரிஷி சுனக்கின் வேலைகளை ஆதரித்துள்ளனர், 23% ரிஷி சுனக்கின் பணி திறன்களை ஏற்கவில்லை என கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.