தயவு செய்து உதவி கேளுங்கள்: அடிமைத்தனம் குறித்து இளவரசி கேட் மிடில்டனின் புதிய வீடியோ
போதை பழக்கத்தில் ஈடுபட்டவர்களிடம் பிரித்தானியாவின் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் யூடியூப் வீடியோ வாயிலாக உரையாற்றினார்.
நிபுணர்களின் சிறிய உதவி மூலம் போதைப் பழக்கத்தை சமாளிக்க முடியும்.
போதை பழக்கத்தில் ஈடுபட்டவர்களிடம் பிரித்தானியாவின் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன், தி ஃபார்வர்ட் டிரஸ்ட் மூலம் பகிரப்பட்ட யூடியூப் வீடியோ வாயிலாக உரையாற்றினார்.
ஜூன் 2021ல் தி ஃபார்வர்ட் டிரஸ்டின் புரவலராக அறிவிக்கப்பட்ட இளவரசி கேட் மிடில்டன், ஞாயிற்றுக்கிழமை அந்த நிறுவனத்தால் பகிரப்பட்ட யூடியூப் வீடியோ வாயிலாக போதை பழக்கத்தில் சிக்கி சிரமப்படுவர்களுடன் நேரடியாக பேசினார்.
இந்த வீடியோவில் போதை பழக்கம் உடையவர்கள் மனநிலை ஒன்றை தவறுதலாக கையாளுவதாக கேட் மிடில்டன் நினைவூட்டினார், மேலும் சரியான நேரத்தில் சரியான நபர்களால் சிகிச்சையளிக்கபட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அத்துடன் போதை பழக்கம் மற்றும் மதுவுக்கு அடிமையானவர்கள் தங்களை மாற்றிக் கொள்ள பல வளங்கள் இருப்பதாகவும், அவர்கள் நிபுணர்களின் சிறிய உதவி மூலம் போதைப் பழக்கத்தை சமாளிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து அடிமைத்தனம் என்பது தீவிர மனநிலை, இது வயது, பாலினம், இனம், அல்லது தேசியம் என எதுவாக இருந்தாலும் இது அனைவருக்கும் ஏற்படும் ஒரு வகை மன நோய், தி ஃபார்வர்ட் டிரஸ்டின் புரவலர் என்ற முறையில், போதைப் பழக்கத்தால் பாதிக்கப்பட்ட பலரை நான் சந்தித்திருக்கிறேன்.
அவர்களில் பெரும்பாலானோர் அடிமைத்தனத்தின் மீதான அவமானங்களால் பிறரிடம் உதவி கேட்க தயங்குகின்றனர், இதனால் பலர் தங்கள் வாழ்க்கையை இழந்து வருகின்றனர், அடிமைத்தனம் ஒரு தேர்வு அல்ல என்பதை தயவுசெய்து அறிந்து கொள்ளுங்கள்.
யாரும் அடிமையாக மாறுவதைத் தேர்வுசெய்ய வேண்டாம். இதுவும் தீவிரமான உடல்நலக் குறைபாடு என்பதை நீங்கள் அறிய விரும்புகிறேன். அவமானம் உங்களைத் தடுக்க வேண்டாம். உங்களுக்கு மிகவும் அவசியமான உதவி, எனவே தயவு செய்து உதவியை கேளுங்கள் என பேசினார்.
மேலும் அடிமையாதல் பிரச்சாரத்தின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தொண்டு நிறுவனங்கள் மற்றவர்களுடன் சேர்ந்து உதவி செய்ய காத்து இருப்பதாக தெரிவித்தார்.
கூடுதல் செய்திகளுக்கு: நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிப்பு: பிரித்தானியாவின் சதி ஏற்பாடு என ரஷ்யா குற்றச்சாட்டு
இவ்வாறு அடிமைத்தனங்களில் சிக்கி துன்பம் அடைபவர்களுக்கு, உதவுவதற்கான ஒரே வழி, அவர்களுடன் அனுதாபம் கொள்வதும், அவர்களின் போராட்டங்களில் இரக்கம் காட்டுவதும் மட்டுமே என்பதை ஒரு சமூகமாக நாம் அங்கீகரிக்க வேண்டும் என்றும் பிரித்தானியாவின் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் யூடியூப் வீடியோவில் தெரிவித்தார்.