அரண்மணைக்கு முத்து நகைகளை அணிந்து வந்த இளவரசி கேட்: ராயல் குடும்பம் பின்பற்றும் பாரம்பரியம்!
பக்கிங்ஹாம் அரண்மனைக்கு முத்து நகைகளை அணிந்து வந்த கேட்.
விக்டோரியா மகாராணியின் காலத்திற்கு முந்தைய பாரம்பரியம் என தகவல்.
பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து பிரித்தானிய ராணியின் பூத உடல் அடங்கிய சவப்பெட்டியை பெறச் சென்ற போது வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் முத்து நகைகளை அணிந்து வந்தார்.
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரலில் உயிரிழந்ததை தொடர்ந்து, அவரது பூத உடல் செவ்வாய்க்கிழமை எடின்பர்க்-கில் இருந்து பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில் பிரித்தானிய மகாராணியின் பூத உடல் அடங்கிய சவப்பெட்டியை பெற பக்கிங்ஹாம் அரண்மனைக்கு சென்ற போது வேல்ஸ் இளவரசர் வில்லியமும், வேல்ஸ் இளவரசி கேட் இருவரும் நேர்த்தியான முத்துக்களை அணிந்து வந்தனர்.
மறைந்த ராணிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அரச குடும்ப உறுப்பினர்கள் முத்துக்களை அணிந்து இருந்ததை பார்க்க முடிந்தது.
வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் ஒரு ஸ்மார்ட் கருப்பு உடையுடன் நேர்த்தியாகச் செய்யப்பட்ட முத்து நகைகளை அணிந்து வந்துள்ளார்.
இதனைப் போலவே பாரம்பரிய துக்கத்திற்கான கருப்பு நிற உடையை அணிந்து வந்த டச்சஸ், முத்து காதணிகளுடன் பல சரங்கள் முத்துக்கள் கொண்ட நெக்லஸை அணிந்து வந்ததாக டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.
அரச குடும்பத்தினர் வரலாற்று ரீதியாக துக்கத்தின் போது முத்து நகைகளை அணிந்துள்ளனர், இந்த நடைமுறை விக்டோரியா மகாராணிக்கு முந்திய பாரம்பரியம் ஆகும்.
கூடுதல் செய்திகளுக்கு: திடீரென தீப்பிடித்த இந்திய விமானம்! பாதுகாப்பாக மீட்கப்பட்ட பயணிகள்: வீடியோ காட்சிகள்
Budrevich Fine Jewellery Studioவின் நிறுவனர் Arseiny Budrevich தி எக்ஸ்பிரஸிடம் இது தொடர்பாக தெரிவித்துள்ள தகவலில், அரச குடும்பத்தார் பெரும்பாலும் முத்துக்களை அணிவார்கள், ஏனெனில் அவர்கள் "தாராளமயம், மகத்துவம் மற்றும் பெருந்தன்மையின் உயர்குடி நற்பண்புகளை பிரதிநிதித்துவ படுத்துகிறார்கள்", அத்துடன் "தூய்மை மற்றும் கற்பு" ஆகியவற்றைக் குறிக்கிறது என தெரிவித்துள்ளார்.