அட்டகாசமான கத்தரிக்காய் காரக்குழம்பு செய்வது எப்படி?
வீட்டில் எப்போதும் ஒரு மாதிரியே கறி வைத்து சாப்பிடாமல் சற்று வித்தியாசமாக செய்து சாப்பிட வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். ஆனால் நேரம் செலவழிக்க முடியாமல் பலரும் வழமைப் போன்ற கறி சமைத்து விடுவார்கள்.
எனவே வீட்டில் அதிகமாக பலரும் விரும்பி சாப்பிடக் கூடிய காய்கறியான கத்தரிக்காய் வைத்து எப்படி சுவையான காரக்குழம்பு செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
- கத்திரிக்காய் - 4
- நல்லெண்ணெய் - 4 மேசைக்கரண்டி
- கடுகு - 1 தேக்கரண்டி
- சீரகம் - 1 தேக்கரண்டி
- வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
- காய்ந்த மிளகாய் - 2
- வெங்காயம் - 1
- கறிவேப்பிலை
- சின்ன வெங்காயம் - 25
- பூண்டு - 25
- தக்காளி - 1
- உப்பு - 2 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
- மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
- தனியா தூள் - 2 தேக்கரண்டி
- சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
- தண்ணீர்
- புளி கரைசல் - 1 கப்
- வெல்லம் - 1 தேக்கரண்டி
செய்முறை
1. கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு, சீரகம், வெந்தயம், காய்ந்த மிளகாய் சேர்க்கவும்.
2. பின்பு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
3. பிறகு கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
4. பின்பு பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
5. உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், சாம்பார் பொடி சேர்த்து கலந்துவிடவும்.
6. பின்பு தண்ணீர் ஊற்றி மசாலாவை வேகவிடவும்.
7. பிறகு புளி கரைசல் மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
8. நறுக்கிய கத்திரிக்காய் சேர்த்து கலந்து கடாயை மூடி 10 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்.
9. பின்பு வெல்லம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கலந்து இறக்கவும்.
10. கத்தரிக்காய் காரக்குழம்பு தயார்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |