முதன்முறையாக ஜோடியாக முக்கிய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கேற்றி பெர்ரி, ஜஸ்டின் ட்ரூடோ
கனடாவின் முன்னாள் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ, பிரபல அமெரிக்கப் பாடகியான கேற்றி பெர்ரியைக் காதலிக்கும் விடயம் குறித்து பெரும்பாலானோர் அறிந்திருக்கலாம்.
இந்நிலையில், முதன்முறையாக இருவரும் ஜோடியாக பொதுநிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளதைக் காட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
Katy Perry & Justin Trudeau spotted together again omfg pic.twitter.com/J9WbSU5Yh8
— kanishk (@kaxishk) January 20, 2026
முதன்முறையாக ஜோடியாக...
ஆம், சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்துக்கு வந்திருந்த ட்ரூடோவும், பெர்ரியும் கைகோர்த்தபடி நிகழ்ச்சிக்கு வருகை புரிந்தார்கள்.
Katy Perry is accompanying Justin Trudeau at the World Economic Forum in Davos, Switzerland. pic.twitter.com/z37mzTUqwD
— Katy Perry Today (@todaykatyp) January 20, 2026
ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதும், பெர்ரியின் கைகளை விடவேயில்லை ட்ரூடோ.
Katy Perry and Justin Trudeau attend the World Economic Forum in Davos.🇨🇭 pic.twitter.com/H80QHq0VlL
— Katy Perry Tours (@KatyPerryTours) January 20, 2026
இதற்கு முன்பும் பல இடங்களில் இருவரும் சேர்ந்து காணப்படும் புகைப்படங்கள் வெளியானாலும், இப்படி அவர்கள் இருவரும் ஜோடியாக இப்படிப்பட்ட பொதுநிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |