விண்வெளிக்கு செல்லும் உலகளவில் பிரபலமான பாடகி: தன் மகள் குறித்து பதிவு
அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி கேட்டி பெர்ரி விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
கேட்டி பெர்ரி
உலகளவில் பிரபல பாப் பாடகர்களில் ஒருவராக இருப்பவர் கேட்டி பெர்ரி (Katy Perry). 40 வயதான இவர் பல ஹிட் பாடல்கள் மற்றும் ஆல்பங்களை கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் பெர்ரி விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதன்மூலம், 1963ஆம் ஆண்டு வாலண்டினா தெரேஷ்கோவுக்குப் பின் விண்வெளிக்கு செல்லும் விண்வெளி வீராங்கனை அல்லாத பெண் எனும் பெருமையை பெறுகிறார்.
ப்ளூ ஆரிஜினின் வரவிருக்கும் என்.எஸ்.31 திட்டத்தில் இணைந்து சாதனை படைக்க உள்ளார்.
குறிப்பிட்ட இலக்கை அடைய
இத்திட்டத்தில் நியூ ஷெபர்ட் விண்கலத்தில், இரண்டு பத்திரிகையாளர்களுடன் கேட்டி பெர்ரி பயணம் செய்ய உள்ளார்.
எனது விண்வெளி பயணம் என் மகளையும், மற்றவர்களையும் குறிப்பிட்ட இலக்கை அடைய ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன் என அவர் குறிப்பிட்டார்.
கேட்டி பெர்ரியின் விண்வெளி பயணத்திற்கு லாரன் சான்செஸ் என்ற முன்னாள் பத்திரிகையாளர் தலைமை தாங்குகிறார்.
அவர் இந்த பெண் விண்வெளி வீரர்கள் குழுவை உருவாக்க முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |