43 வயதிலும் திருமணம் செய்யாமைக்கு என்ன காரணம்? மனம் திறந்த கௌசல்யா
90 களின் ஜெனிலியாவாக திகழ்ந்தவர் தான் நடிகை கௌசல்யா, குறும்புத்தனமான தனது நடிப்பின் காரணமாக இவருக்கு அந்த காலத்தில் பெண்களிலும் ரசிகர் பட்டாளமே இருந்தது.
தற்போது துணை நடிகை கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். இவருக்கு தற்போது 43 வயது ஆகிறது. பெங்களூருவில் பிறந்து வளர்ந்தவர்.
நடிகை கௌசல்யா
மலையாளத்தில் வெளியான ஏப்ரல் 19 படம் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமானார். அதே நேரத்தில் தமிழில் இவர் முரளி நடித்த காலமெல்லாம் காதல் வாழ்க எனும் திரைப்படத்தில் இவர் கௌசல்யா எனும் கேரக்டரில் அறிமுகமானதாலே இவரை தமிழில் பலரும் கௌசல்யா என்று அழைத்து வருகிறார்கள்.
முதல் திரைப்படமே இவர் எதிர்பார்க்காத அளவில் இவருக்கு வெற்றியை கொடுத்த நிலையில், அடுத்ததாக இவர் விஜய் கூட இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். விஜய்யுடன் கதாநாயகியாக நடித்த நிலையில் ஒரு சில வருடங்களில் விஜய்க்கு அக்காவாகவும் அண்ணியாகவும் நடிக்க தொடங்கி விட்டார்.
அது மட்டும் இல்லாமல் சந்தோஷ் சுப்பிரமணியம் திரைப்படத்தில் ஜெயம் ரவியின் அக்கா கேரக்டரில் நடித்திருக்கிறார். கதாநாயகியாக நடித்து கெஸ்ட் ரோலில் நடிக்கும் நிலைக்கு வந்தாலும் இவர் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.
புடவைக்கட்டும் பெண்களை “நல்ல குடும்பத்து பெண்” என்ற தொனியில் பார்க்கும் ஆண்களுக்கு இவர் கனவு கன்னியாக இருந்தவர். இவர் சில அம்மன் படங்களிலும் நடித்துள்ளார். எனவே இவருக்கு எல்லா வயதிலும் ரசிகர்கள் இருக்கின்றார்கள்.
இவர் சமீபத்தில் ஒரு ஊடகத்திற்கு பேட்டி கொடுத்திருந்தார். அதில் தனக்கு தற்போது வரை திருமணம் ஆகாமல் இருப்பதற்கான காரணத்தை மனம் திறந்து வெளிப்படையாக கூறியிருக்கின்றார்.
தனக்கும் ஒரு கிரிக்கெட் விளையாட்டு வீரருக்கு தொடர்பு இருக்கிறது என அப்போது கிசு கிசு எழுந்ததாக கூறினார். ஆனால், இது உண்மையல்ல என்று மறுத்திந்திருக்கின்றார்.
மேலும், திருமணம் என்பது மிகவும் அழகான விஷயம் என்றும் தனக்கு ஒருவருடன் திருமணம் வரை ஒரு உறவு சென்றதாகவும் கூறினார். ஆனால், அந்த உறவு முறிந்து போனதால் மனதளவில் அதிலிருந்து வெளிவர தனக்கு குறிப்பிட்ட அளவு காலம் தேவைப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அது மட்டுமன்றி உடலில் சில ஆரோக்கிய பிரச்சினைகள் இருந்ததாகவும் சில ஆண்டுகள் உடல் பருமனுடன் காணப்பட்டதாகவும் இதனால் திருமணம் குறித்து சிந்திக்கவில்லை என வெளிப்படையாக பதிலளித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |