2025 Kawasaki Ninja ZX 4R பைக் ரூ.8.79 லட்சத்தில் அறிமுகம்
இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான கவாஸாகி இந்தியா (Kawasaki India) நிறுவனம் தனது 2025 சூப்பர் ஸ்போர்ட்ஸ் பைக்கின் ZX 4R மொடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது இந்தியாவின் முதல் நடுத்தர எடை 4-சிலிண்டர் சூப்பர் ஸ்போர்ட்ஸ் பைக் என்று நிறுவனம் கூறுகிறது.
இந்தியாவில் 400சிசி பைக் பிரிவில், இது Yamaha R15 V4 உடன் போட்டியிடும், அதே நேரத்தில் விலை பிரிவில், இது Triumph Daytona 660 (ரூ .9.72 லட்சம்) மற்றும் Suzuki ZSX-8R (ரூ .9.25 லட்சம்) ஆகியவற்றுடன் போட்டியிடும்.
Kawasaki Ninja ZX 4R பைக்கை ஸ்பெஷல் மெட்டாலிக் ஸ்பார்க் பிளாக் வண்ண ஆப்ஷனுடன் சிங்கிள் வேரியண்ட்டில் அறிமுகம் செய்துள்ளது.
இது தவிர, பைக்கில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.8.79 லட்சமாக வைக்கப்பட்டுள்ளது, இது முந்தைய மொடலை விட 30 ஆயிரம் ரூபாய் அதிகமாகும்.
உயர் செயல்திறன் கொண்ட இந்த பைக் கம்ப்ளீட் பில்ட் யூனிட் (CBU) ஆக இறக்குமதி செய்யப்படும்.
நின்ஜா இசட்எக்ஸ்-4ஆர் பைக்கும், நின்ஜா இசட்எக்ஸ்-10ஆர் மற்றும் நின்ஜா இசட்எக்ஸ்-6ஆர் பைக்குகளும் கையாளும் அனுபவத்தை வழங்கும். இந்த பைக்கில் 17 அங்குல அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.
400சிசி செக்மென்ட்டில் மிகவும் சக்திவாய்ந்த ஸ்போர்ட்ஸ் பைக் 2025 கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ்-4ஆர் பைக்கில் இருக்கும் 399சிசி லிக்யூடு கூல்டு, இன்லைன் 4 சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 14,500 ஆர்பிஎம்-ல் 77 பிஎச்பி பவரையும், 13,000 ஆர்பிஎம்-ல் 39 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.
6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது. இந்த எஞ்சின் மூலம் இந்தியாவின் 400சிசி செக்மென்ட்டில் மிகவும் சக்திவாய்ந்த பைக் என்ற பெருமையை இந்த பைக் பெற்றுள்ளது.
இந்த பைக்கில் கவாஸாகி டிராக்ஷன் கண்ட்ரோல் கொண்ட டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.
Kawasaki Ninja ZX 4R பைக்கில் 4.3-இன்ச் முழு வண்ண டிஎஃப்டி டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது, அதன்பின்பு ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் ஸ்போர்ட், ரெயின் மற்றும் ரோடு என கஸ்டமைஸ் ரைடிங் மோடுகள் உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
2025 Kawasaki Ninja ZX 4R