ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்திய வீரரை கடித்த கஜகஸ்தான் வீரர் மீது நடவடிக்கை எடுக்கப்படாது! UWW சொன்ன காரணம்
டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் ரவிகுமாரை கடித்த கஜகஸ்தான் வீரர் சனாயேவ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என யுனைடெட் உலக மல்யுத்தம் அமைப்பு (UWW) அறிவித்துள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்த போட்டி 57 கிலோ எடைப் பிரிவில் நடந்த அரையிறுதிப் போட்டியில் இந்திய வீரர் ரவி குமாரிடம் கஜகஸ்தான் வீரர் சனாயேவ் தோல்வியடைந்தார்.
இந்த போட்டியில் சனாயேவ் ரவிகுமாரை கடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பில் சர்வதேச மல்யுத்த நிர்வாக அமைப்பான, யுனைடெட் உலக மல்யுத்தம் (UWW) அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், மல்யுத்த போட்டியில் கடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து விவாதம் மற்றும் மதிப்பாய்வு செய்யப்பட்டது, அதன் அடிப்படையில் இது வேண்டுமென்றே செய்தது அல்ல என முடிவு செய்யப்பட்டது.
அந்த முடிவின் அடிப்படையில் எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படாது என UWW அறிக்கையில் தெரிவித்துள்ளது.
UWW-வால் அமல்படுத்தப்பட்ட விதிகளின் படி, மல்யுத்த வீரர்கள் போட்டியாளரின் தலைமுடி, காதுகள், பிறப்புறுப்புகளை இழுப்பதற்கு, கிள்ளுதல், கடித்தல் மற்றும் கைவிரல்கள் அல்லது கால்விரல்களை முறுக்க தடை செய்யப்பட்டுள்ளது.