கைகளை பாக்கெட்களில் வைத்துக் கொள்ளுங்கள்! பிரித்தானியா ஆண் எம்.பி-களுக்கு புத்திசொன்ன பெண் எம்.பி!
பிரித்தானியா நாடாளுமன்றத்தில் பணிபுரியும் அனைத்துப் பெண்களும் தகாத தொடுதல் அல்லது பாலியல் ரீதியிலான வார்த்தைகளுக்கு ஆளாகிறார்கள் என நாட்டின் வர்த்தக அமைச்சர் Anne-Marie Trevelyan தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் விவாத அறையில் ஆபாசப் படங்களைப் பார்த்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரித்து வருவதாக ஆளும் கன்சர்வேடிவ் கட்சி இந்த வாரம் கூறியதை அடுத்து, எம்.பி-க்களின் நடத்தை குறித்து கவனம் செலுத்தப்படுகிறது.
இந்நிலையில், பிரித்தானியா வர்த்தக அமைச்சர் Anne-Marie Trevelyan கூறியதாவது, நாடாளுமன்றத்தில் பணிபுரியும் அனைத்துப் பெண்களும் தகாத தொடுதல் அல்லது பாலியல் ரீதியிலான வார்த்தைகளுக்கு ஆளாகிறார்கள்.
உக்ரைன் துப்பாக்கிச் சூட்டில் மடிந்த சக வீரரை இழுத்துக்கொண்டு ஓடிய ரஷ்ய வீரர்கள்!
சில ஆண் அரசியல்வாதிகள் எம்.பி. பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதால், பெண்களை கடவுளின் பரிசாக கருதுகின்றனர்.
நாடாளுமன்றத்தில் உள்ள பெண்களாகிய நாம் அனைவரும் தகாத வார்த்தைப் பிரயோகங்களுக்கும், அலையும் கைகளுக்கும் ஆளாகியிருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன்.
நாடாளுமன்றத்தில் மட்டுமல்ல இது எங்கும் நடந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
அடிப்படையில், நீங்கள் ஒரு முட்டாள் என்றால், உங்கள் கைகளை உங்கள் பாக்கெட்டுகளில் வைத்துக்கொண்டு, உங்கள் மகள் அறையில் இருந்தால் நீங்கள் எப்படி நடந்துக்கொள்வீர்களோ அப்படி நடந்துக்கொள்ளுங்கள் என Anne-Marie Trevelyan அறிவுறுத்தியுள்ளார்.