உக்ரைன் துப்பாக்கிச் சூட்டில் மடிந்த சக வீரரை இழுத்துக்கொண்டு ஓடிய ரஷ்ய வீரர்கள்!
உக்ரைனில் துப்பாக்கிச் சூட்டில் மடிந்த சக வீரரை ரஷ்ய வீரர்கள் இழுத்துக்கொண்டு ஓடிய சம்பவத்தின் வீடியோ வெளியாகியுள்ளது.
குறித்த சம்பவம் மரியுபோலில் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மரியுபோலில் அசோவ்ஸ்டல் எஃகு ஆலையை நோக்கி முன்னேற முயன்ற போது ரஷ்ய வீரர்கள், உக்ரைன் படையின் சரமாரி துப்பாக்கிச் சூட்டை எதிர்கொண்டுள்ளனர்.
குறித்த வீடியோவில், ரஷ்ய வீரர்கள் குழு ஒன்று அசோவ்ஸ்டல் எஃகு ஆலைக்கு அருகில் உள்ள கட்டிடம் ஒன்றில் தஞ்சமடைய ஓடுகின்றனர்.
இதன் போது உக்ரைன் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்துகின்றனர். இதில் ரஷ்ய வீரர்கள் ஒருவர் தாக்கப்பட்டு மடிந்து விழுகிறார்.
அப்போது கடும் துப்பாக்கிச் சூட்டிற்கு மத்தியில் மடிந்த விழுந்த வீரரை பாதுகாப்பான இடத்திற்கு இழுத்துச் செல்ல மற்றொரு ரஷ்ய வீரர் முயல்கிறார்.
இதனையடுத்து, மேலும் ஒரு வீரர் வந்து மடிந்த வீரரை இழுத்துச் செல்ல முயல்கிறார்கள்.
Graphic video that shows a Russian naval infantryman shot while running to a building in Mariupol, severing an artery. A BTR-82 arrives at the end to help with the evacuation. According to the Russian source, the serviceman did not survive. https://t.co/g8eflW8l3I pic.twitter.com/ADXfB9fUOX
— Rob Lee (@RALee85) April 29, 2022
லிவிவ் நகரை அழித்துவிடுங்கள்! உக்ரேனிய முன்னாள் துணை ஜனாதிபதி ரஷ்ய டி.வி-யில் பேச்சு
குறித்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. எனினும், வீடியோ எப்போது எடுக்கப்பட்டது போன்ற விவரங்கள் ஏதும் தெரியவில்லை.