லிவிவ் நகரை அழித்துவிடுங்கள்! உக்ரேனிய முன்னாள் துணை ஜனாதிபதி ரஷ்ய டி.வி-யில் பேச்சு
உக்ரைனின் லிவிவ் அழித்தொழிக்கும் ஆயுதத்தை ரஷ்யா பயன்படுத்த வேண்டும் என உக்ரேனிய முன்னாள் துணை ஜனாதிபதி இல்யா கிவா தெரிவித்துள்ளார்.
ரஷ்ய அரசு தொலைக்காட்சியில் பேசிய இல்யா கிவா, லிவிவ் நகரம் நாசிசத்தால் நிரம்பிய பகுதி.
மேலும், ரஷ்யா மீது வெறுப்பை பரப்பி வருகிறது. லிவிவ் நகரத்திற்கு எதிராக பெரியளவில் சேதங்களை ஏற்படுத்தும் ஆயுதத்தை பயன்படுத்த வேண்டும் என இல்யா கிவா தெரிவித்தார்.
விமான நிலையத்திற்குள் வெடிகுண்டுடன் வந்த அமெரிக்கர்கள்.. பீதியில் தெறித்து ஓடிய பயணிகள்!
உக்ரைனை விட்டு தப்பியோடிய இல்யா கிவா, ஸ்பெயினில் இருந்த படி இந்த வீடியோக்களை வெளியிட்டு வந்ததாக கூறப்பட்டது.
உக்ரைனின் புச்சா நகரில் உக்ரேனியர்கள் படுகொலை செய்யப்பட்டு சடலங்கள் சாலையில் வரிசையாக கிடந்த காட்சி வீடியோவாக இணையத்தில் வெளியாகி கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
உலகையே உலுக்கிய உக்ரைனின் புச்சாவில் இடம்பெற்ற படுகொலைகள், பிரித்தானியாவால் திட்டமிடப்பட்டு உக்ரைனால் அரங்கேற்றப்பட்டது என உக்ரேனிய இல்யா கிவா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.