விமான நிலையத்திற்குள் வெடிகுண்டுடன் வந்த அமெரிக்கர்கள்.. பீதியில் தெறித்து ஓடிய பயணிகள்!
இஸ்ரேலில் உள்ள விமான நிலையத்திற்கு அமெரிக்க சுற்றுலா பயணிகள் வெடிகுண்டுடன் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பென் குரியன் விமான நிலையத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது. இஸ்ரேலில் கோலன் ஹைட்ஸ் சுற்றுலா சென்ற அமெரிக்க குடும்பத்தினருக்கு வெடிக்காத வெடிகுண்டு கிடைத்துள்ளது.
இதை ஞாபகார்த்தமாக தங்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்ல அவர் முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், சுற்றுலாவை முடித்த அமெரிக்கர்கள், நாடு திரும்ப இஸ்ரேலில் உள்ள பென் குரியன் விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.
அங்கு சோதனை செய்த அதிகாரி, அமெரிக்க சுற்றுலா பயணிகள் சூட்கேஸில் வெடிகுண்டு இருப்பதை கண்ட உடன் அவசர வெளியேற்றத்தை அறிவிக்கும் எச்சரிக்கை ஒலியை எழுப்பியுள்ளார்.
இதை கேட்டு விமான நிலையத்திலிருந்து பயணிகள் அனைவரும் உயிர் பயத்தில் தெறித்து ஓடியுள்ளனர்.
Security staff at Ben Gurion Airport panicked to see the prized possession and raised alarm for an emergency evacuation.
— Arun Bothra ?? (@arunbothra) April 29, 2022
Video via @jess_ih_ka pic.twitter.com/U7ONw9Ehia
ரஷ்யாவுக்கு எதிராக போரிட பிரித்தானியர்கள் செல்லக்கூடாது! போரிஸ் அரசு வலியுறுத்தல்
இதன் போது பார்சல் அனுப்பும் வழியாக தப்ப முயன்ற நபர் ஒருவர் காயமடைந்ததாக இஸ்ரேல் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, அமெரிக்க குடும்பத்தினரை பாதுகாப்பு அதிகாரி விசாரணை நடத்தி பிரச்னை ஏதுமில்லை என உறுதிப்படுத்திய பிறகு, அவர்கள் அனைவரும் விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட்டதாக இஸ்ரேல் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.