ரஷ்யாவுக்கு எதிராக போரிட பிரித்தானியர்கள் செல்லக்கூடாது! போரிஸ் அரசு வலியுறுத்தல்
ரஷ்யாவுக்கு எதிராக போரிட உக்ரைனுக்கு பிரித்தானியா குடிமக்கள் பயணிக்கக்கூடாது என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
முன்னதாக, உக்ரைனில் நடைபெற்று வரும் போரில் நேற்று பிரித்தானியர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், மற்றொருவர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது.
உக்ரைனில் கொல்லப்பட்டவர் 36 வயதான ஸ்காட் சிப்லி என்பது உறுதியானது.
இதைத்தொடர்ந்து, மோதலில் ஈடுபட உக்ரைனுக்கு பிரித்தானியர்கள் செல்லக்கூடாது என சர்வதேச வர்த்தக செயலாளர் Anne-Marie Trevelyan வலியுறுத்தியுள்ளார்.
உக்ரைனை தொடர்ந்து டிரான்ஸ்னிஸ்ட்ரியாவில் பதற்றம்! உடனே வெளியேற குடிமக்களுக்கு இஸ்ரேல் உத்தரவு
உக்ரைனில் நடப்பதை பார்த்து பொதுமக்கள் உண்மையாக மன வருந்துகிறார்கள் என்பதை நான் புரிந்துக்கொள்கிறேன், ஆனால் பிரித்தானியா குடிமக்கள் உக்ரைனுக்கு சென்று மோதலில் ஈடுபடுவதை நாங்கள் விரும்பவில்லை.
உக்ரைனில் உள்ளவர்களை ஆதரிக்க பல வழிகள் இருக்கிறது, அகதிகளுக்கு வீடு வழங்குவது மற்றும் அவர்களுக்காக நன்கொடை அளிப்பது என பல வழிகள் இருக்கிறது என Anne-Marie Trevelyan குறிப்பிட்டுள்ளார்.